இதுவே எங்களின் கடைசி செய்தியாக இருக்கலாம்… காப்பாற்றுங்கள்! உக்ரைன் தளபதியின் உருக்கமான வீடியோ

அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருக்கும் படைகள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என மரியுபோல் நகருக்கான உக்ரேனிய தளபதி தெரிவித்துள்ளார். 36வது தனி கடல் படையின் தளபதி Serhiy Volyna அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட்-க்கு வீடியோ மூலம் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒருபோதும் ஆயுதங்களை கீழே போட்டு ரஷ்யாவிடம் சரணடை மாட்டோம். ரஷ்யா படைகளுக்கு எதிரான மோதல் தொடரும். இது உலகிற்கு நாங்கள் அனுப்பும் செய்தியாகும். இதுவே எங்களின் கடைசி செய்தியாக இருக்கலாம். எங்களுக்கு இன்னும் … Read more

தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது! திருமாவளவன் குற்றச்சாட்டு…

சீர்காழி: தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது என மயிலாடுதுறை சம்பவம் குறித்து விசிக தலைவர்  திருமாவளவன் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம்மீது கருப்புக்கொடிகள் வீசப்பட்ட நிகழ்வு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை யில் விரிவான விளக்கம் அளித்தார். அதுபோல, நேற்றைய நிகழ்வு குறித்த திருமாவளவனும், ஆளுநர் வாகனம் மீதான தாக்குதலுக்கு கணடனம் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று தனது கருத்தை மாற்றி பேசியுள்ளார். இன்று சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

ரேசன் கடைகளுக்கு ஆண்டுக்கு 500 புதிய கட்டிடங்கள் கட்டப்படும்- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: தமிழக சட்டசபை யில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் பேசும் போது, ஆற்காடு தொகுதி புங்கனூர் ஊராட்சி எல்லாசி குடிசை, வரதேசி நகர் மற்றும் விளாபாக்கம் பேரூராட்சி, சின்னதக்கை ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதே போன்று எம்.எல்.ஏக்கள் அருள், உதயகுமார், நீலமேகம், சிவக்குமார், உள்ளிட்டோரும் ரேசன் கடை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேசன் … Read more

பண்ருட்டி அருகே 29 ஏக்கரில் ரூ.13 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: கடலூர் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் 29 ஏக்கரில் ரூ.13 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசி சார்ந்த பிற உணவுப் பொருட்களுக்கு வர்த்தக முத்திரை பதிவு செய்யப்படும். வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு பெற ஏதுவாக சேகோசர்வ் ஆய்வகம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பணமதிப்பிழப்பால் நகரத்து வறுமை அதிகரிப்பு.. உண்மையை உடைத்த உலக வங்கி..!

இந்தியாவில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார ரீதியில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை மேம்படுத்த மத்திய அரசு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி பல முக்கியமான திட்டங்களைக் கடந்த 20 வருடமாக அறிவித்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் வறுமை அளவுகள் குறித்து உலக வங்கி செய்த ஆய்வில் 2011 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வறுமை அளவு 12.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பணமதிப்பிழப்பு பற்றி மோடி கூறியது என்ன.. மன்மோகன் சிங் கணித்தது என்ன.. இதோ ஒரு அலசல்..! … Read more

“ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை!" – ஸ்டாலின் விளக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, “ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், ஆளுநர் கார் மீது … Read more

மொழி தெரியாததால் லொட்டரியில் விழுந்த பரிசை வாங்க நண்பரை அனுப்பிய நபர்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்

சுவிட்சர்லாந்தில் லொட்டரி வாங்கிய ஒருவர், தனக்கு ஜேர்மன் மொழி தெரியாததாலும், தனக்கு சற்று உடல் நிலை சரியில்லாததாலும், தான் வாங்கிய லொட்டரிச் சீட்டில் பரிசு விழுந்துள்ளதா என்று பார்ப்பதற்காக தனது நண்பரை அனுப்பியுள்ளார். திரும்பி வந்த அந்த நண்பர் அவருக்கு லொட்டரியில் 2,300 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். லொட்டரியில் பரிசு விழுந்த மகிழ்ச்சியில், அந்த நபர் தன் நண்பருக்கு 200 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுத்து தன் மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். … Read more

ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மயிலாடுதுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழகஅரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. நேற்று மயிலாடுதுறை சென்ற ஆளுநரின் கார் மீது எதிர்க்கட்சிகள் கருப்புகொடியுடன் கூடிய கம்புகளை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில், செய்தியாளர்களை … Read more

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர்கள் பங்கேற்க தடை- வெளியான தகவல்

லண்டன்: உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய வீரர்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடை விதிப்பதற்கு அந்த போட்டியை நடத்தும் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் விம்பிள்டனில் பங்கேற்பது குறித்து பிரிட்டிஷ் அரசுடன் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அமைப்பு ஆலோசனை செய்தது. இதுகுறித்த முடிவை மே மாதம் மத்தியில் வெளியிடுவோம் என … Read more