இந்தியாவில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 247-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 47 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா … Read more

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!

நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பினை 80 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 8.2 சதவீதமாக குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம். ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது. இது நுகர்வினை பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில், அதிகளவிலான கச்சா எண்ணெய் விலையானது, தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டினை பாதிக்கலாம் என தெரிவித்துள்ளது. இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு … Read more

ஊட்டி சந்தைக்கடை மாரியம்மனுக்கு உப்புக் காணிக்கை! கைகூடும் பலன்கள் என்னென்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் நகராட்சிச் சந்தை நிர்மாணிக்கப்பட்டது. சந்தை அருகிலேயே சந்தைக்கடை மாரியம்மன் ஆலயத்தை நிர்மாணித்து வணிகர்கள் வழிபட்டு வந்தனர். ஒரே பீடத்தில் காளியம்மன் மற்றும் மாரியம்மன் இருவரும் மூலவர்களாக வீற்றிருக்கும் ஆலயமாக விளங்கி வருகிறது. இது மட்டுமல்லாது, காளியம்மன் உக்கிரமின்றி சாந்தமாக வீற்றிருக்கும் அதிசய ஆலயமாக இந்த ஆலயம் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. தேர் பவனி ஒவ்வோர் ஆண்டும் சந்தைக்கடை மாரியம்மன் கோயில் திருவிழா ஒரு மாத காலம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது … Read more

ரம்புக்கனை தாக்குதல் தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ரம்புக்கனையில் பொலிசார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர், இது தொடர்பில் கோட்டாபயவின் டுவிட்டர் பதிவில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது. ரம்புக்கனையில் நடந்த சோகமான … Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தாமல் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கோடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வழக்கு … Read more

ஆளுநர் விவகாரம்: சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்றிருந்தார். அங்கு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் வாகனம் மீது கல் வீசி நடத்திய தாக்குதலுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு  செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

காரைக்கால் துறைமுகத்தில் கேப் கப்பல் கையாளும் வசதி

காரைக்கால் : காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில், ‘கேப்’ கப்பல்களை கையாளும் வசதி துவக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் போர்ட் பிரைவேட் லிமிடெட் (கே.பி.பி.எல்.,) என்ற தனியார் கப்பல் துறைமுகம் 13ம் ஆண்டுகளாக இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் 13ம் ஆண்டு நிறைவு தினம், துறைமுக தலைமை செயல் அதிகாரி ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்த துறைமுகத்தில் முதல் முறையாக, ‘கேப்’ கப்பலான எம்.வி., பெர்ஜ் மெக்லின்டாக்கை கையாளப்பட்டது. இதுகுறித்து துறைமுக நிர்வாகம் கூறியதாவது: ‘கேப்’ கப்பலின் … Read more

பிரதமரின் தீவிர நடவடிக்கையால் மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் – பாஜக மூத்த தலைவர் நம்பிக்கை

புதுடெல்லி, பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் … Read more

பெண்கள் உள்ளாடை வர்த்தகத்தை டார்கெட் செய்யும் ரிலையன்ஸ்.. ஏன் தெரியுமா..?

முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகச் சேவை பிரிவான ரிவையன்ஸ் ரீடைல் ஈஷா அம்பானி தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஈஷா அம்பானி ஆடை வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். இதற்காகப் பல முன்னணி மற்றும் பிரபலமான பிராண்டுகள் உடன் வர்த்தகக் கூட்டணி வைப்பது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றித் தனது பிராண்டாக்கி வருகிறது. இப்படி முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் … Read more