ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது மற்றும் அவரது வாகனத்தின்மீது கருப்புகொடி கம்புகளை வீசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்க விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்த நிலையில், அதிமுக அவையில் … Read more

மொழிப்பிரச்சினையில் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது- அமைச்சர் அறிக்கை

சென்னை: தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மொழிப் பிரச்சினையில் வழக்கம் போல அ.தி.மு.க. மேற்கொள்ளும் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டதும். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கழகத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்தி மொழிக்கு அ.தி.மு.க. பட்டுக் கம்பளம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைக்க முயற்சித்திருக்கின்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நாளை காலை விசாரணை

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நாளை காலை சசிகலாவிடம் காவல்துறை  விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருந்து: அமைச்சர் ஆலோசனை| Dinamalar

புதுடில்லி : உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக மத்திய சுகாதாரஅமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்தின் ஜாம் நகரில் அமையவிருக்கிறது. இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிசை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து மாண்டவியா … Read more

டெல்லி: வன்முறை நடந்த ஜஹாங்கீர்பூரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இன்று இடிப்பு

புதுடெல்லி, இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் ’அனுமன் ஜெயந்தி’ என கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தியையொட்டி மத பேரணிகளும் நடைபெற்றது. இந்த பேரணியின் போது சில பகுதிகளில் வன்முறை, மோதல் சம்பவங்களும் அரங்கேறியது.   இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். ஜஹாங்கீர்பூரி சி-பிளாக் பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் … Read more

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இன்னும் குறையுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்றும் பலத்த சரிவில் காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது சற்று தடுமாற்றத்தினை கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்து வந்தது. இது நிபுணர்களின் கணிப்பினை போல சில தினங்களுக்கு முன்பு அவுன்ஸூக்கு 2000 டாலர்களையும் தொட்டது. எனினும் அதன் பிறகு சரியத் தொடங்கிய தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்வதால் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பல … Read more

"RSS காரர்கள் என்னை கம்யூனிஸ்ட் என்று திட்டுகிறார்கள்!"- நினைவுகள் பகிரும் ஜெயமோகன்

“நீங்கள் சினிமாவில் பணியாற்றுகிறீர்கள். வாசகர் வட்டத்தில் இருக்கிறீர்கள். அரசியல் சார்ந்து சில விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறீர்கள். இவ்வளவு வேலைகள் செய்துகொண்டே எப்படி எழுத்துப் பணியில் தவறாமல் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே வருகிறீர்கள்?” “என்னுடைய வேலை எழுதுவதுதான். நான் நிறைய விஷயம் செய்தாலுமே, ப்ராக்டிகலாக எதையும் செய்வது இல்லை. விஷ்ணுபுரம் விருதுகள்கூட எல்லாமே நான் வேலை பார்ப்பது கிடையாது. அதை எல்லாமே என் நண்பர்கள் தான் செய்கிறார்கள். அதைப் பண்ண வைப்பதற்கான ஒருங்கிணைப்பு … Read more

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்… இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ட்வீட்

ரம்புக்கனையில் இடம்பெற்ற துயர சம்பவத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, ரம்புக்கனையில் இடம்பெற்ற துயர சம்பவத்தை தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எப்பொழுதும் இலங்கைக்கு மிகுந்த கௌரவத்துடன் சேவையாற்றி வரும் இலங்கை காவல்துறையால், கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சமமான மரியாதை மற்றும் கௌரவத்துடன் போராட்டக்காரர்கள் தங்கள் குடிமை உரிமையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் … Read more

சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு இடத்தில் நின்று மனைவியோடு தமிழக ஆளுநர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் … கோவிலில் எங்கே என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதெல்லாம் வழிபாட்டிற்காக பக்தராய் வரும் ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு தெரிய வாய்ப்பில்லை.. அவசியமுமில்லை .. ஆனால் இங்கே புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது மரபு மற்றும் கட்டுப்பாடு என ஆளுநருக்கு அதிகாரிகளும் தீட்சதர்களும் சொல்லியிருக்க … Read more

கொரோனாவை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா தொற்று உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்பதில் இருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், மால்கள் போன்ற … Read more