ஐபிஎல்! இலங்கை பவுலர் பந்தில் கோல்டன் டக் ஆன கோலி… துள்ளிகுதித்து கொண்டாடிய வீடியோ

ஐபிஎல் போட்டியில் இலங்கையை சேர்ந்த துஷ்மந்த சமீரா பந்துவீச்சில் முதல் பந்திலேயே விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆன வீடியோ வைரலாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 31வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூர் அணி நட்சத்திர வீரர் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் … Read more

20/04/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இன்று இரண்டாயிரத்தை கடந்துள்ளது.  தினசரி நேர்மறை விகிதம்  0.31 சதவீதத்தில் இருந்து 0.83 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக  2,067 பேர் கொரோனாவால்  பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,47,594 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் … Read more

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இன்று, மணலி புதுநகர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை உள்பட கொசஸ்தலை ஆற்று பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன்படி, மணலி புதுநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ரூ.15 கோடியில் கொசஸ்தலை ஆற்றின்கரைகளை பலப்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து, மணலி வடிவுடையம்மன் கோவிலிலும் அதன் சுற்றியுள்ள தெருக்களிலும் மற்றும் புதுநகர் … Read more

புதிதாக கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைக்கு முன்னுரிமை தரப்படும்.: அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: வரும் காலத்தில் புதிதாக கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைக்கு முன்னுரிமை தரப்படும் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 4 கோளரங்கம் இருந்தாலும், தென்மாவட்டங்களில் ஏதும் இல்லை; மதுரையில் உடனடியாக கோளரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

“போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா?” – எடியூரப்பா கேள்வி

பெங்களூரு, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். 12 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இத்தகையவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா? ஆனால் தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், அப்பாவிகளை கைது செய்ய … Read more

காளையின் ஆதிக்கம் தொடங்கியாச்சு.. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்திலேயே முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. 2ம் கட்ட … Read more

KGF 2: `நீண்ட நாள்களுக்குப் பிறகு இதைப் பார்க்கிறேன்' – நடிகை ரவீனா பகிர்ந்த வீடியோ!

ரவீனா டண்டன் 1990-களில் தில்வாலே, மொஹ்ரா உள்ளிட்ட பாலிவுட் ஹிட் படங்களின் கதாநாயகி. இப்போது KGF-2 படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். KGF-2 படத்தின் வெற்றி தரும் மகிழ்ச்சியை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ரவீனா. KGF-2 படத்தின் முதல் பாகம் 2018-ல் வெளியாகி பெரியளவில் வெற்றி விற்றது. அதனை விட பிரமாண்டமாக உருவாகி இருக்கும் அதன் சாப்டர் 2 ரசிகர்களை ஈர்க்கத் தவறவில்லை. திரைக்கு முன்பு ரசிகர்கள் உற்சாகமாக சில்லறைகளை சிதற விடும் காட்சியை … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 12

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 12 பா. தேவிமயில் குமார் சொல்லிவிடு… வெள்ளி நிலவே ! இப்படித்தான் அவளும் உன்னுடன் உரையாடினாளா ? ஒளி நிலவே ! பூக்களைப் பார்த்து புன்னகைத்திட நேரம் இருந்ததா ? வெளிப்படுத்த முடியா உணர்வுகளை ஓவியங்களாகத் தீட்டினாளா ? அடிமைப்படுகிறோம் என அறிந்தாளா ? இல்லை அன்பின் வழியென மகிழ்ந்தாளா ? நலமா ? என அவளை யாரேனும் கேட்டார்களா ? மகப்பேறும், மாதவிடாயும் மறித்து நின்றதா ? … Read more

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லி செல்லும் கவர்னர் ஜனாதிபதி, பிரதமர் மோடி , மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து … Read more

பட்டாக் கத்திகளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்: 4 பள்ளி மாணவர்களிடம் விசாரணை

சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோ வெளியிட்டுள்ளனர். கீழ்பாக்கம் சைபர் க்ரைம் பிரிவு போலீசார் 4 பள்ளி மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.