கொரோனா பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்!

சென்னை : கொரோனா பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில்  கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

பயங்கரவாத சூழலை அழிப்போம் : ஜம்மு – காஷ்மீர் கவர்னர் ஆவேசம்

ஜம்மு : ”ஜம்மு – காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ஒருகாலத்தில் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. இப்போது பயங்கரவாத சூழலை அழித்து அமைதியை நிலைநாட்டும் வல்லமை நம் பாதுகாப்பு படையினருக்கு உள்ளது,” என, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.ஜம்மு – காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:அமர்நாத் யாத்திரையின் போது பக்தர்களின் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் நம் படையினர் தகுந்த பதிலடி தருவர். அமைதியை நிலைநாட்ட எதையும் செய்ய நம் … Read more

சீரிஸ் 5: பங்கு ஒதுக்கீடு என்றால் என்ன.. சிறு முதலீட்டாளர்கள் எப்படி வாய்ப்பை அதிகப்படுத்தலாம்!

நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் போது மொத்த பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு? தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு? நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு? ஊழியர்களுக்கு எவ்வளவு என பிரித்து தான் வெளியீடு செய்வார்கள். இதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கினை ஒதுக்கீடு செய்வார்கள். உதாரணத்திற்கு சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10% பங்கினை ஒரு நிறுவனம் பிரித்து கொடுக்கிறது என வைத்துக் கொள்வோம். 3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு … Read more

“பாதுகாப்புத் துறையில் இந்தியா விரும்புவதை அளிக்கத் தயார்” – ரஷ்ய அமைச்சர் உறுதி

அண்மையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், `இந்தியா விரும்புவதை நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என கூறியிருந்தார். இந்த நிலையில், “பாதுகாப்புத்துறையில் இந்தியா விரும்பும் எதையும் நாங்கள் வழங்க முடியும்” என செர்ஜி லாவ்ரோவ் மீண்டும் உறுதியளித்துள்ளார். தனியார் ஊடக நேர்காணலில் பேசிய செர்ஜி லாவ்ரோவ், “இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டின் உண்மையான தேசபக்தர். நாட்டின் பாதுகாப்பில், அதன் வளர்ச்சிக்கு என்ன தேவை என்று இந்தியா எதை … Read more

இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 1ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி … Read more

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்!

சென்னை : சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு rte.t schools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் இன்று முதல் வருகிற மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தகவல் பகிர்வில் தாமதமா? குற்றச்சாட்டை மறுக்கும் கேரள அமைச்சர்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம் : ”கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தினசரி அனுப்பவில்லை,” என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ள குற்றச்சாட்டை, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மறுத்துள்ளார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.நாட்டில், கொரோனா பாதிப்பு துவங்கியது முதல், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தினசரி பரிசோதனை, பாதிப்பு, இறப்பு, குணமடைந்தோர் உள்ளிட்ட தகவல்களை, … Read more

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ஸ்பை படங்கள் வெளியானது

வரும் 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடலின் சாலை சோதனை ஓட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள ஹிமாலயன் 411 மாடலை விட கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை நவீன தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களாக பெற உள்ளது. எனவே மிகவும் மாறுபட்ட டிசைன் அம்சங்களுடன் நவீன டெக்னாலஜி வசதிகளையும் இந்த மாடல் பெற உள்ளது. ஹிமாலயன் … Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மானிய கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்க சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும்: தூதரகம் அறிவிப்பு

சென்னை : அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்டு ஹெஃப்லின், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்பு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஐ.டி. கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்கான தேதி ஒதுக்கப்படும் என்று கூறினார். மேலும் மாணவர்களுக்கு மே 2-வது வாரத்தில் விசா … Read more