பால் உற்பத்தியில் முதலிடம்: பிரதமர் மோடி

பனஸ்கந்தா:”உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட, பால் விற்பனைக்கு சமமாக இல்லை,” என பிரதமர் மோடி கூறினார்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம், தியோதர் பகுதியில், புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை, நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:பனஸ்கந்தாவில் … Read more

`இரண்டாம் கட்ட போர் தொடங்கிவிட்டது..!' – உக்ரைன் அரசு தகவல்

உக்ரைனில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரில், உக்ரைனின் அப்பாவி மக்களையும் ரஷ்ய ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கின்றனர் என ரஷ்யாமீது உக்ரைன் குற்றம்சாட்டிவருகிறது. ஆனால், பொதுமக்கள் மீது ரஷ்ய வீரர்கள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை எனக் கூறிவரும் ரஷ்யா, ஒரே இரவில் உக்ரைனின் 16 ராணுவத் தளங்களைத் தங்கள் படைகள் அழித்ததாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், `ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது’ என உக்ரைன் … Read more

வாயு தொல்லையால் பெரும் அவதியா? அப்ப இந்த கஞ்சியை குடிங்க போதும்

பொதுவாக வாயுத் தொல்லை இருந்தால், சாப்பிடாமலேயே சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு இருக்கும். வயிற்று உள்ளே ஏதோ கனமான ஒரு பொருள் இருக்கிற மாதிரி, கணமாக இருக்கும். மேலும், ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். நம்மால் நிம்மதியாக சாப்பிடவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல், பெரும் அவஸ்தையாக இருக்கும். அதிலும் வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என்று மாறி, மாறி பாடாய் படுத்திவிடும்.  இதனை எளியமுறையில் போக்க பூண்டு கஞ்சியை உதவுகின்றது. இதனை  வாரம் இருமுறை … Read more

தேசிய கல்விக் கொள்கை: தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கொள்கையை உருவாக்க குழுவை அமைத்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில்  தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த  உத்தரவிடக்கோரி , கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் … Read more

சென்னையில் 4.60 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏப்.4 -17 வரை 4.60 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15,987 வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் நடந்த சொந்தனையில் 4.60 டன் பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளது.

செய்திகள் சில வரிகளில் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் போட்டி| Dinamalar

பெங்களூரு: அடுத்த ஆண்டு நடக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, பெங்களூரு பானஸ்வாடியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை, அக்கட்சி தேசிய தலைவர் சரத் பவார் நேற்று திறந்து வைத்தார். ”சட்டசபை தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவோம்,” என அவர் கூறினார்.ரூ.11,513 கோடி திட்டங்கள்பெங்களூரு: முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், கர்நாடக உயர்மட்ட கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. 11 ஆயிரத்து, 513 கோடி ரூபாய்க்கு, 10 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம், 46 … Read more

காளையா கரடியா.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்.. மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. கடந்த அமர்வில் அமெரிக்க பத்திர சந்தைகள் ஏற்றம் கண்டதையடுத்து, அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இது சீனாவின் வேகமாக பரவி வரும் கொரோனாவினால் பொருளாதாரம் வளர்ச்சியானது, மெதுவான வளர்ச்சி காணலாம் என்ற மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன. முதல் நாளே 1400 … Read more

ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை… ட்விட்டரில் புகாரளித்த பயணி! – சி.ஆர்.பி.எஃப் வீரர் கைது

குருவாயூர் விரைவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் குடிபோதையில் அங்கிருந்த சக பயணிகளை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை ரயிலில் பயணம் செய்த வசந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு ரயில்வே மற்றும் தமிழகக் காவல்துறைக்குப் புகைப்படங்களுடன் புகாராகத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே காவல்துறைக்குத் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்திருந்தார். @GMSRailway this guy is fully drunk and splits saliva inside … Read more

நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன்!

கோவிட் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தனது முதல் அறிக்கையின் போது COVID-19 ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக மன்னிப்பு கேட்பார். 2020-ஆம் ஆண்டு டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது பிறந்தநாள் விழாவில் வேண்டுமென்றே விதிகளை மீறவில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். இன்று (உள்ளூர் நேரப்படி) பிற்பகல் 3:30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய … Read more

சென்னையில் 9 இடங்களில் புதிய மேம்பாலங்கள்! மாநராட்சியுடன் இணைந்து மாநில அரசு நடவடிக்கை…

சென்னை: தலைநகர் சென்னையில் 9 இடங்களில்  மேம்பாலங்கள் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாலம் அமைப்பது குறித்து மாநில நெடுஞ்சாலையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஏற்கனவே 22 மேம்பாலங்கள் உள்ளன. தற்போது மேலும் 9 மேம்பாலங்களை அமைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைப்பது … Read more