ஏர்டெல் வாடிக்கையாளார்கள் கவனத்திற்கு.. சில திட்டங்களில் திருத்தம்..!

தொலைத் தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம், அதன் 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் முன்பை விட குறைவான நன்மைகளைப் பெறுவார்கள். ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?! ஏர்டெல்லின் இந்த மாற்றத்தினால் முன்பு கிடைத்த சலுகைகள் குறையுமா? வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். எந்தெந்த திட்டங்களில் மாற்றம் ஏர்டெல்லின் போஸ்ட் … Read more

ஆயுள் தோஷம் போக்கிடும் சப்தஸ்தான பல்லக்கு விழா… சிறப்புகள் என்னென்ன?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநீலக்குடி திருத்தலத்தில் ஸ்ரீ அழகாம்பிகை சமேத ஸ்ரீ நீலகண்டேஸ்வரர்  அருள்பாலிக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. இது திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலமாகும். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தின் கொடிய வெம்மையைத் தாளாது, பிரபஞ்சமே இருண்டு ஸ்தம்பித்தபோது, அனைவரையும் காக்கும் பொருட்டு சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தினை உண்டார். கொடுமையான விஷமானது உட்செல்லாதபடி அன்னையானவள் பெருமானின் கண்டத்தை அழுத்தித் தடுத்தாள்.   சப்தஸ்தான பல்லக்கு விழா ஆயினும், ஆலகாலத்தின் அதி வீரியத் தன்மை காரணமாக … Read more

ரஷ்ய டேங்கர் கப்பலை கைப்பற்றிய பிரபல ஐரோப்பிய நாடு!

உக்ரைன் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் கீழ் ரஷ்ய டேங்கர் கப்பலை கிரீஸ் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ஈவியா தீவில் (Evia) ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை கிரீஸ் கைப்பற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிரான புதிய கடுமையான தடைகளை ஏற்றுக்கொண்டதால், சில விதிவிலக்குகளுடன், 27-நாடுகளின் துறைமுகங்களில் இருந்து ரஷ்யக் … Read more

இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பதே பெருந்தன்மை! தேமுக தலைவர் விஜயகாந்த் 

சென்னை: இளையராஜாவை  காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகத்தில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை வழங்கியது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களில் கடுமையான வார்ததைகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இளைய ராஜா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர் தனது கருத்தை வாபஸ் பெற முடியாது என … Read more

டூ பிளசிஸ் அபாரம் – லக்னோ அணி வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

மும்பை: ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.  அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். … Read more

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

மும்பை: லக்னோ அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்க உள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடி: விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பெரும் அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம், கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருள்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்து உள்ளன. இந்த பொருள்களின் விலை உயர்வால் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்தது. கொழும்பு … Read more

உக்ரைனில் மற்றோரு பெரிய இழப்பை உறுதிசெய்த ரஷ்யா

ஒரு பெரிய ரஷ்ய கப்பலின் கேப்டன் உக்ரைனில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனிய போரில் ஏற்பட்ட காயங்களால் கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உயிரிழந்தார் என்று Sevastopol கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார். ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் ஒரு பகுதியான சீசர் குனிகோவ் (Caesar Kunikov) என்ற பெரிய தரையிறங்கும் கப்பலின் தளபதியாக கேப்டன் சிர்வா இருந்தார். “அவரது தைரியம், தொழில்முறை மற்றும் அனுபவம் குழு உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியது” என்று கேப்டன் … Read more

19/04/2022: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8 மணி அளவில் வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 13,446  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,320 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் … Read more

ஆளுநரின் வாகனம் மீது கற்கள் வீசப்படவில்லை – போலீசார் விளக்கம்

சென்னை: மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு முன் மூன்று அடுக்கு இரும்புத் தடுப்பு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. ஆளுநரின் கான்வாய் சென்ற நிலையில் கருப்புக் கொடிகளை அவர்கள் வீசியெறிந்தனர்.  ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், கைதுசெய்து வாகனத்தில் ஏற்றியதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் … Read more