மகன் இறந்ததால் துக்கம்! ரொனால்டோ எடுத்துள்ள முடிவு?

தனது குழந்தையை இழந்த சோகத்தில் உள்ள பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிய வந்துள்ளது. ரொனால்டோவிற்கும், அவரது காதலி ஜார்ஜினாவுக்கும் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. அதனை உறுதிபடுத்தும் விதமாக ரொனால்டோவும் பதிவிட்டார். மேலும் மிகப்பெரிய வலியை தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அறிந்த அவரது ரசிகர்களும் வேதனையடைந்தனர். இந்நிலையில், ரொனால்டோ விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி அறிக்கை ஒன்றை … Read more

இந்தியாவில் தீவிர வறுமை 12.3%ஆக குறைந்துள்ளது!உலக வங்கி ஆய்வறிக்கை தகவல்…

டெல்லி: இந்தியாவில் தீவிர வறுமை வெகுவாக குறைந்துள்ளது என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களின் ஏழ்மை நிலை குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் 2011ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தீவிர ஏழ்மை 12 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 1.9 டாலர், அதாவது 145 ரூபாய்க்கு கீழான வருமானத்தில் வாழும் நிலை இருந்தால் அவர் அதீத ஏழ்மை  (தீவிர வறுமை) நிலையில் இருக்கிறார் என்பது உலக வங்கியின் … Read more

தமிழக கவர்னர் கார் மீது கல்வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை :   சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக்கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது  கடும் தாக்குதல் நடத்தி  உள்ளனர்.   தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே … Read more

மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது கருப்புக் கொடி வீசப்படவில்லை: காவல்துறை விளக்கம்

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது கருப்புக் கொடி வீசப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மழை பாதிப்பு பகுதிகள் கண்காணிப்பு| Dinamalar

பெங்களூரு : பெங்களூரில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் 169 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க, போலீஸ் துறை, மாநகராட்சி முடிவு செய்துள்ளன. பெங்களூரில் நான்கைந்து நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் நீர் தேங்குகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இது போன்று மழை பாதிப்புள்ள, குடியிருப்புகள், ஜங்ஷன், சுரங்கப்பாதை உட்பட, 169 பகுதிகளை பெங்களூரு போக்குவரத்து போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இத்தகைய இடங்களை மாநகராட்சியுடன் … Read more

ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் டான்ஸ் வீடியோ வைரல்.. ஓலா பைக்-ல் இப்படியொரு சேவையா..!!

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஓலா ஒருபக்கம் தீ பிடித்து எறியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கண்டு பயந்தாலும், மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் குறையாத நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து சேவை முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காகவே ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வான பாவிஷ் அகர்வால் தனது சிஇஓ பொறுப்புகளை விடுத்து டெக் பிரிவில் பணியாற்றத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் நிறுவனரான பாவிஷ் அகர்வால் தனது டிவிட்டரில் கலக்கலாக டான்ஸ் … Read more

கூவாகம்: தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள்; களைகட்டும் கூத்தாண்டவர் திருவிழா!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில். உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக, இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள். திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், இத்திருவிழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி ஒன்றாகச் சங்கமிக்கும் திருநங்கைகள், தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்திருப்பதோடு, புத்துணர்வைப் பெறுகின்றனர். மேலும், திருநங்கைகளின் பெருமையை மற்றவர்களை உணரச் செய்திடும் … Read more

கண்களை மூட சொல்லி மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த இளம்பெண்! சொன்ன அதிர்ச்சி காரணம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண்ணொருவர் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞரை கண்களை மூட சொல்லி அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அல்லூரி சித்தராமராஜு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமு நாயுடு. இவருக்கும் அனகப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமுவை சாய்பாபா மலைக்கு புஷ்பா அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சர்ப்ரைஸ் தருவதாக கூறி கண்களை மூட சொல்லியுள்ளார். ராமுவும் ஆச்சரியத்தை எதிர்நோக்கி கண்களை மூடியபோது, புஷ்பா … Read more

மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது! நீதிமன்றம் காட்டம்…

சென்னை: மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள் காண கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அங்கு செல்லும் பக்கிங்காம் கால்வாய் பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாவட்ட நிர்வாகத்தால் மாற்றப்பட்டு வருகிறது. இதை  எதிர்த்து, கடந்த 2018ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் வாதங்களைத் … Read more

இளையராஜாவை மேலும் விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது – விஜயகாந்த்

சென்னை: தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தைச் சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோல … Read more