குழாய் மூலம் கேஸ் இணைப்பு; உணவு பூங்காக்கள்; புதிய தொழிற்பூங்காக்கள்! தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்…

சென்னை: குழாய் மூலம் கேஸ் இணைப்பு; உணவு பூங்காக்கள்; புதிய தொழிற்பூங்காக்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், தமிழகம் உற்பத்தி சூழல் அமைப்பில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித் துறையில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் … Read more

டெல்லி வீரருக்கு கொரோனா: டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதும் போட்டி மும்பைக்கு மாற்றம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி புனேவில் நடைபெற இருந்த நிலையில், மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.  டெல்லி அணியில்  மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்பே வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது புனேவில் … Read more

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, மடங்களுக்கான நிதியை விடுவிக்கக்கூட 30% கமிஷன் கேட்கிறது: லிங்காயத் சமூகத் தலைவர் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, மடங்களுக்கான நிதியை விடுவிக்கக்கூட 30% கமிஷன் கேட்கிறது என லிங்காயத் சமூகத் தலைவர் குற்றம் சாட்டினார். மடங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக கர்நாடக அரசு அறிவிக்கும் நிதியை, நேரடியாக பெற முடியாத சூழல் உள்ளது என லிங்காயத் சமூகத் தலைவர் திங்களேஸ்வர சுவாமி குற்றச்சாட்டு தெரிவித்தார். அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வருவதால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகாரித்துள்ளது என தெரிவித்தார்.    

ஒலிபெருக்கி பயன்பாடு வழிமுறை; மஹா.,வில் விரைவில் வெளியீடு| Dinamalar

மும்பை : ”மஹாராஷ்டிராவில், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், இரண்டு நாட்களில் வெளியிடப்படும்,” என, மாநில உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் தெரிவித்து உள்ளார். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ‘ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு முன், ‘அனுமன் சாலிஸா’ … Read more

பேடிஎம் பங்கு பற்றியே கவலைபடாதீங்க.. நம்பிக்கை கொடுத்த சிட்டி!

விஜய் சேகர் ஷர்மாவின் ஐபிஓ கனவானது நினைத்ததை போலவே நிறைவேறினாலும், இதனால் முதலீட்டாளர்கள் இன்று வரையிலும் ஹேப்பியாக இல்லை எனலாம். ஏனெனில் இப்பங்கின் விலையானது வெளியீட்டு நாளிலேயே 27%-க்கும் அதிகமான சரிவினைக் கண்டது. இன்று வரையில் 65% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதன் வெளியீட்டு விலையானது 2150 ரூபாயாகும். இது நிறுவனம் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அதன் லாபம் பற்றிய கவலைகள் அதிகம் உள்ளது. ஒழுங்குமுறை நடவடிக்கை குறிப்பாக பேடிஎம் மீதான ஓழுங்கு முறை … Read more

IPL 2022: தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சஹால்… இது மாஸ்டர் கம்பேக்குகளின் சீசன்!

இளம் வீரர்களுக்கான பயிற்சிப் பாசறையாக மட்டுமில்லாமல், வேலிடிட்டி முடிந்து விட்டதாக ஓரங்கட்டப்பட்ட வீரர்களது கம்பேக்குகளையும் இந்த ஐபிஎல் சீசன் காட்சிப்படுத்தி வருகிறது. புதிய கத்திகள் பட்டைத் தீட்டப்படுவது அழகிய காட்சிதான் என்றாலும், `துருப்பிடித்து விடவில்லை’ எனப் பழைய வாள்கள் போர்க்களத்தில் மிளிருவது, இன்னமும் அழகுதானே? அந்த வகையில், நடந்து முடிந்துள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் தலா இரண்டு ஆட்டநாயகர்கள் விருதுகளோடு கம்பேக் கொடுத்துள்ள இந்தியக் கம்பேக் வீரர்கள் குறித்த ஒரு பார்வை… குல்தீப் யாதவ்: இந்தியாவின் முதல் லெஃப்ட் … Read more

ஐபிஎல்! சிஎஸ்கே அணி தொடர்ந்து உதைபடும் சூழலில் தோனி, ஜடேஜா எடுத்த முடிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹாருக்கு மாற்று வீரர் குறித்து அணி நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கேவுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அடிமேல் அடி விழுந்து வருகிறது. விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோற்றுள்ளது அந்த அணி. சிஎஸ்கே பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருவதுதான் பெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், தீபக் சஹார் இல்லாததுதான். இவர் காயம் காரணமாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சை பெற்று … Read more

படிக்கட்டு பயணம்: 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை இறக்கிவிட்டு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…

சென்னை: அரசு பேருந்துகளில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி, 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டதுடன், அவர்களை எச்சரித்தும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி, … Read more

ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை உருவாக்க அரசு முயற்சி

சென்னை: சட்டசபையில் இன்று தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில் துறையின் வளர்ச்சி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, தனிமனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தில் உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், … Read more

ஆளுநர் – முதல்வர் சண்டை போட்டால் என்ன பிரச்சனை வரும் என்பதற்கு தெலங்கானா உதாரணம்: ஆளுநர் தமிழிசை பேச்சு

சென்னை: ஆளுநர் – முதல்வர் சண்டை போட்டால் என்ன பிரச்சனை வரும் என்பதற்கு தெலங்கானா உதாரணம் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் பணி அனுபவம் குறித்த நூல் விலையீட்டு விழாவில் ஆளுநர் தமிழிசை பேசினார். அப்போது, ஆளுநர் – முதல்வர் சுமக்க உறவால் என்ன நல்லது நடக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணம். தெலுங்கானாவில் நான் செல்லும் இடங்களுக்கு ஆட்சியர், எஸ்.பி. கூட வருவதில்லை என்று குறிப்பிட்டார்.