கேரள குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி..!!

திருவனந்தபுரம்: கேரள குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தன் மீதான பாலியல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது வழக்கு தொடரப்பட்டது. மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2017ல் நடிகர் திலீப் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

மொரீஷியஸ் பிரதமருக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு| Dinamalar

ஆமதாபாத் : இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகன்னாத்துக்கு, குஜராத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மொரீஷியசுக்கு, பிரவிந்த் குமார் ஜகன்னாத், பிரதமராக உள்ளார். இந்திய வம்சாவளியான இவர், எட்டு நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விமான நிலையத்திற்கு, நேற்று மாலை வந்திறங்கிய ஜகன்னாத்துக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 கி.மீ., துாரத்திற்கு, சாலையின் … Read more

ஆக்ஸிஸ் வங்கியின் அதிரடி முடிவு.. வாடிக்கையாளர்கள் கவலை.. இனி வட்டி அதிகரிக்குமே..!

எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட சில வங்கிகள் தங்களது எம்சிஎல்ஆர் விகிதங்களை உயர்த்திய நிலையில், அதனை தொடர்ந்து தற்போது தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் அதன் MCLR விகிதத்தினை உயர்த்தியுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தின் படி, இவ்வங்கியானது 5 அடிப்படை புள்ளிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதமானது ஏப்ரல் 18, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இனி கடன்களுக்கான மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வீட்டுக் … Read more

`உங்கள் பொருளாதார தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள்!'- பெண்களுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்

பாலிவுட் முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா, நிகழ்ச்சி ஒன்றில் ஃபேஷன் மற்றும் அழகு பற்றி பேசியபோது, பெண்கள் பொருளாதார சுதந்திரம் கொண்டவர்களாக, அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.  தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து பேசுகையில், 17 வயதில் அவரின் அம்மா கூறிய அறிவுரையைப் பகிர்ந்தார் பிரியங்கா. “பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும்; உங்கள் தந்தை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் கணவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் சகோதரன் யாராக … Read more

ரஷ்யா மீது குண்டு போட்டு வீடுகளை தவிடுபொடியாக்கிய உக்ரைன் படைகள்! வெளியான ஆதாரம்

ரஷ்யா கிராமம் மீது உக்ரைன் படைகள் குண்டு போட்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 54வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், டான்பாஸில் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதாக உக்ரேனிய ஜானதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே, எல்லைக்கு அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று பெல்கோரோட் நகரில் உள்ள Golovchino கிராமம் மீது … Read more

ஓசூரில் புதிய விமான நிலையம் – சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து தொழில்துறை … Read more

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை … Read more

10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்ற முயற்சி ஐ.நா., உறுப்பினர் பாராட்டு| Dinamalar

புதுடில்லி : ”வரும் 2070ம் ஆண்டுக்குள், கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாடாக இந்தியா உருவெடுப்பதுடன், பருவநிலை மாற்றத்தில் மற்ற நாடுகளும் இலக்கை எட்ட ஆதரவு அளிக்கும் நாடாக அது உருவாகும்,” என, ஐ.நா., உறுப்பினர் ரேச்சல் கைட் தெரிவித்தார். ஐ.நா., பொதுச் செயலரின் பருவநிலை நடவடிக்கை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ரேச்சல் கைட் டில்லி வந்துள்ளார். பருவநிலை தொடர்பான பிரச்னைகளை சமாளிப்பது குறித்து இங்குள்ள கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். … Read more

காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை; ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில் தட் கர்ணா பகுதியில் ஹஜம் மொகல்லா என்ற இடத்தில் அதிக அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை போலீசார் மற்றும் படையினர் கைப்பற்றினர்.  அவற்றில் 10 பிஸ்டல்கள், 17 மேகசின்கள் (தோட்டாக்களை வைக்கும் உபகரணம்), 54 தோட்டாக்கள் மற்றும் 5 எறிகுண்டுகள் ஆகியவை இருந்தன. இதனை பயங்கரவாதிகள் யாரேனும் விட்டு சென்றார்களா? … Read more