பாலக்காட்டில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்ல தடை- அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பா.ஜ.க.

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகி சுபைர் வெட்டி கொல்லப்பட்டார். சுபைர் கொல்லப்பட்ட மறுதினமே பாலக்காடு பஜாரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை ஒரு கும்பல் வெட்டி கொன்றனர். அடுத்தடுத்து நடந்த கொலைகளால் பாலக்காட்டில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே பாலக்காட்டில் அமைதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தையும், அனைத்து கட்சி கூட்டமும் … Read more

கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதற்கான பணிகள் ஒன்றிய அரசால் நடைபெற்று வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை  6 வழிச் சாலையாக மாற்றுவதற்கான பணிகள் ஒன்றிய அரசால் நடைபெற்று வருகிறது என்று பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். சாலை அமைக்கும் வரை சுங்க கட்டணம் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,45,527 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 928 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,11,701 ஆனது. தற்போது … Read more

கொரோனா தகவல்களை தினந்தோறும் அளியுங்கள் – கேரள அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு

புதுடெல்லி,  கேரளாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 213 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளார். மற்றவர்கள், சில நாட்களுக்கு முன்பே இறந்தும், கணக்கில் சேர்க்கப்படாதவர்கள் ஆவர். விடுபட்ட அந்த மரணங்களையும், கேரள அரசு ஒரு நாள் மரண கணக்கில் சேர்த்துள்ளது. இந்த நிலையில், கேரள சுகாதார முதன்மை செயலாளர் ராஜன் என்.கோப்ரகாடேவுக்கு மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் … Read more

சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை .. எவ்வளவு குறைஞ்சிருக்கு.. இனியும் சரிவு தொடருமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது தங்க முதலீட்டாளர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த அமர்வில் நிபுணர்கள் கூறியது போல அவுன்ஸூக்கு 2000 டாலர்களை கடந்தது. எனினும் இன்று முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே … Read more

நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னிபேருந்து, கார் அடுத்தடுத்து மோதல்… 2 பேர் பலி, 14 பேர் படுகாயம்

தூத்துக்குடியிலிருந்து உப்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியே சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்தையன் (64) என்பவர் ஓட்டினார். அப்போது அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் லாரி சென்றுகொண்டிருக்கும் போது, லாரி டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் லாரி ஓட்டுநர் அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டயர் மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் திசையன்விளையிலிருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை … Read more

அஸ்வின் பவுலிங்கில் பேட்டை தாண்டி சென்று ஸ்டெம்பை பதம் பார்த்த பந்து! கோல்டன் டக் ஆன ரசல் வீடியோ

ஐபிஎல் போட்டியில் ஆண்ட்ரே ரசல் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் முறையில் வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரசல் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வைட் அங்கிளில் இருந்து வந்து பந்து வீசினார். What a delivery … Read more

‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டம் மற்றும் அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டம் மற்றும் அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் … Read more

பணமோசடியும், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலும் கிரிப்டோவை சுற்றியுள்ள சவால்கள்- நிதி மந்திரி உரை

வாஷிங்டன்: பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவை தான் கிரிப்டோகரன்சியை சுற்றி இருக்கும் மிகப்பெரிய சவால் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:- உலக அளவில் கிரிப்டோகரன்சியை பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க பயன்படுத்துவதே பெறும் சவாலாக இருக்கிறது. இதை தடுப்பதற்கு நாம் தொழில்நுட்ப பயன்பாடை ஒழுங்குப்படுத்த வேண்டும். 2019ம் ஆண்டு தரவுகளின்படி இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தை … Read more

ஊராட்சி ஒன்றியங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் பதில்

சென்னை: ஊராட்சி ஒன்றியங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். கிராம மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும் அமைச்சர் கூறினார். சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.