அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது. வேலூரில் ஏற்கனவே அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் நேற்று 103.2 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. அதேபோல் திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெயில் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது. இந்த நிலையில் … Read more

மேட்டூர் அணை நிலவரம்: அணையின் நீர்மட்டம் 104.88 அடியில் இருந்து 71.31 டி.எம்.சி.யாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணை நீர்வரத்து 2,360 கனஅடியில் இருந்து 2,973 கனஅடி ஆக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.88 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 71.31 டி.எம்.சி.யாக உயர்ந்துள்ளது.

சென்னை மியாட் மருத்துவமனை நிபுணர்கள் புதுச்சேரிக்கு 23ம் தேதி, 24ல் கடலுார் வருகை

புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள், மருத்துவ ஆலோசனை வழங்க, புதுச்சேரிக்கு வரும் 23ம் தேதி வருகை தருகின்றனர். கடலுாரில், 24ம் தேதி ஆலோசனை வழங்க உள்ளனர். சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மருதாச்சலம், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சுப்பிரமணியன் ஆகியோர், வரும் 23ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.இருவரும், ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி … Read more

“இந்துக்கள் தலா 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்” – பிரபல பெண் சாமியார் பரபரப்பு பேச்சு

கான்பூர்,  விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான ‘துர்கா வாகினி’யை நிறுவியவர் பெண் சாமியாரான சாத்வி ரிதம்பரா. இவர் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பிரபலமானவர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ராம் மகோத்சவ் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- இந்து பெண்கள், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், இந்து தம்பதியர் அனைவரும் தலா 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவற்றில், 2 குழந்தைகளை தங்களுக்கென வைத்துக்கொண்டு, மீதி … Read more

டோலி கண்ணாவின் போர்ட்போலியோ பங்கு 1 வருடத்தில் 300% லாபம்.. நீங்களும் வாங்கியிருக்கீங்களா?

சென்னையை சேர்ந்த பிரபல முதலீட்டாளாரான டோலி கண்ணா, 1996ம் ஆண்டு முதல் பங்கு சந்தையில் முதலீடு செய்து வருபவர். இவர் அதிகளவில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை வாங்குவது வழக்கம். அந்த வகையில் அவரின் போர்ட்போலியோவில் உள்ள ஒரு ஸ்மால் கேப் பங்கானது 300% மேலாக, கடந்த ஒராண்டில் ஏற்றம் கண்டுள்ளது. அது என்ன பங்கு? இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு! இதில் … Read more

Doctor Vikatan: ஜலதோஷம் பிடித்திருக்கும்போது வொர்க் அவுட் செய்யலாமா?

ஜலதோஷம் பிடித்திருக்கும்போது வொர்க் அவுட் செய்யலாமா? வொர்க் அவுட் செய்தால் ஏற்படுகிற வியர்வை ஜலதோஷத்தை அதிகரிக்காதா? ஜலதோஷம் இருந்தாலும் வொர்க் அவுட் செய்தால் சீக்கிரம் குணமாகும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ் ஜலதோஷம் பிடித்திருந்தால் சிலருக்கு மூக்கடைப்பும் நுரையீரலில் சிரமமும் இருக்கும். அந்த நிலையில் வொர்க் அவுட் செய்தால் உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமமாக உணர்வீர்கள். எனவே கடுமையான ஜலதோஷம் பிடித்திருந்தால் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்க்கவும். … Read more

உக்ரைனில் பெண்களிடம் அத்துமீறிவிட்டு கொன்ற ரஷ்யர்களுக்கு வெகுமதியை வாரி இறைத்த புடின்! புதிய திடுக் தகவல்

உக்ரைனில் பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு விளாடிமிர் புடின் வெகுமதி வழங்கியதற்கு ஏன் உலகளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்படவில்லை என எம்.பி காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 55-வது நாளை தொட்டுள்ளது. அதன்படி இரண்டாம் கட்டப்போரை ரஷ்யா தொடங்கியுள்ளது, அதாவது உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸில் ரஷ்ய ராணுவங்கள் மீண்டும் புதிய தாக்குதலை திங்கள்கிழமை முதல் முன்னெடுத்து இருக்கும் நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கிவிட்டது என அந்த நாட்டின் ஜனாதிபதி … Read more

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான சித்திரைத் தேரோட்ட திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழா … Read more

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

ஜகார்தா: இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா. பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடக்கு வடகிழக்கே 779 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இன்று காலை 6.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் … Read more

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை : சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.