‘மிஸ் கூவாகம் 2022’ பட்டத்தை வென்றார் சென்னையை சேர்ந்த மெகந்தி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த ‘மிஸ் கூவாகம்’ போட்டியில், சென்னையைச் சேர்ந்த மெகந்தி ‘மிஸ் கூவாகம் -2022’ பட்டம் பெற்றார். விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், மிஸ் கூவாகம் 2022 இறுதிச்சுற்று போட்டி நேற்று இரவு நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமை வகித்தார். முதல் சுற்றில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இதில் ஏழு பேர், மூன்றாம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, பொது அறிவுத்திறன் போட்டி நடந்தது. … Read more

அருப்புக்கோட்டையில் லாரி- ஆம்னி பேருந்து – கார் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலி; 14 பேர் காயம்!!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து – கார் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலியாகினர். புறவழிச்சாலையில் நின்று கொண்டு இருந்த லாரி மீது பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு| Dinamalar

சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு துறை பிரபலங்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. அதன்படி, இந்திய திரை துறையில் இருந்து பிரபல நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கான், பிரேம் சோப்ரா, தமன்னா, மவுனி ராய், ஜூஹி சாவ்லா, சில்பா செட்டி, மனிஷா கொய்ராலா, கிரிக்கெட் துறையில் இருந்து ஹர்பஜன் சிங், ஏ.பி.டெவிலியர்ஸ், மேத்திவ் ஹைடன், விவியன் ரிச்சர்ட்ஸ், இசை துறையில் இருந்து பாடகர்கள் சோனு நிகம், ஸ்ரேயா கோசல், … Read more

தேனி: சாணத்தில் நகையெடுத்தவர், காவல் நிலையத்தில் நூலகம் அமைத்தார்; இன்ஸ்பெக்டருக்குப் பாராட்டு மழை!

பெரும்பாலும் காவல் நிலையங்களுக்கு வருவோர் அச்சமும், தயக்கமும் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக புகார் மனு அளிக்க வருகையில் சில நேரங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல்முறையாக தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் 20 பேர் அமர்ந்து படிக்கும் அளவிற்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சின்னமனூர் காவல் நிலையம் சின்னமனூர் காவல் நிலைய வளாகத்திற்குள் நுழையும்போதே அழகான பூங்காவிற்கு செல்வது போன்றே இருக்கிறது. வளாகத்தைச் சுற்றிலும் தொட்டிகளில் பூ மற்றும் … Read more

விராட் கோஹ்லி மண்டையில் 10,000 விடயம் ஓடுகிறது! எச்சரித்து அறிவுரை கூறிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

விராட் கோஹ்லி முதலில் தன்னை ஒரு சாதாரண வீரராக கருத வேண்டும் என்று சோயப் அக்தர் எச்சரிக்கையுடன் அறிவுரை கூறியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்டக்காரர் விராட் கோஹ்லி தன்னை ஒரு சாதாரண வீரராக கருதி ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அறிவுரை கூறியுள்ளார். ஐபிஎல் 2022-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று டெல்லி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தொறக்கடித்தது. ஆனால் அதிரடி ஆட்டக்காரராக … Read more

மயிலாடுதுறையில் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் தலா 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: பெண் சாமியார் சர்ச்சை பேச்சு

கான்பூர் : விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான ‘துர்கா வாகினி’யை நிறுவியவர் பெண் சாமியாரான சாத்வி ரிதம்பரா. இவர் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பிரபலமானவர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ராம் மகோத்சவ் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- இந்து பெண்கள், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், இந்து தம்பதியர் அனைவரும் தலா 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவற்றில், 2 குழந்தைகளை தங்களுக்கென வைத்துக்கொண்டு, … Read more

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

ஜகர்த்தா : இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல் மையம் தெரிவித்து உள்ளது.கலாவேசியில் இருந்து 779 கிமீ தொலைவில் இன்று காலை 6.53 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிறந்த மருத்துவ சேவைக்கு அரசின் வழிகாட்டுதல்| Dinamalar

சிறந்த மருத்துவ சேவை அளிக்கும் வகையில், மருத்துவ பணியாளர்களை நான்கு வகைகளாக பிரிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.சுகாதார பணிகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நாடு முழுதும் சுகாதார பணிகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.இவற்றை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதன் விபரம்:மருத்துவ சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், தரத்தை உயர்த்தும் வகையிலும், குறைந்த … Read more

கோடையை குளிர்ச்சியாக்க சில வழிகள்|முதுமை எனும் பூங்காற்று

முதுகு மற்றும் பல உடற்பாகங்களில் வியர்க்குரு தோன்றும். உடலின் பல பகுதிகளில் வேனல் கட்டிகள் எனப்படும் சிறுசிறு கொப்புளங்கள் தோன்றும். முக்கியமாக நீரிழிவு உள்ளவர்களுக்கு இவை அதிகம் வர வாய்ப்புண்டு. முதியவர்களுக்கு கோடையும் சரி… குளிர் காலமும் சரி பல தொல்லைகளைத் தரக்கூடியவையே. குளிர் காலத்தில் இருமல், சளித் தொல்லைகள் அதிகம் ஏற்படும். வெயில் காலத்தில் தோலில் சிறு சிறு வேனல் கட்டிகள் ஏற்படும். அதிக வியர்வை, களைப்பு, நாக்கு வறட்சி மற்றும் தூக்கமின்மை போன்ற பல … Read more