19.04.2022 – இன்றைய ராசி பலன் – Today Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 19.04.2022 #indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Source link

ஹேக் செய்யப்பட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் கணினிகள்: முக்கிய தகவல்கள் கசிந்து இருக்கலாம் என அச்சம்!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கணினிகள் உலகின் மிகப்பயங்கரமான மற்றும் சக்தி வாய்ந்த சைபர் ஆயுதங்கள் கொண்டு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தர உளவு மென்பொருளான பெகாசஸ் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கணினிகளை குறிவைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உளவு மென்பொருளானது கடந்த ஜூலை 2020 ஆம் ஆண்டு எண்10 என்ற நெட்ஒர்க்கை பயன்படுத்திய சாதனங்களில் காணப்பட்டதாக சைபர் போஃபின்கள் தெரிவித்திருந்தனர், மேலும் இதே வகை அத்துமீறல்கள் வெளியுறவு அமைச்சத்தின் … Read more

மத்தியஅரசு ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்! பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மத்தியஅரசு ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலை உயர்த்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை ஜிஎஸ்டி குழுவினர் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி . 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு மற்றபொருட்களுக்கு 8% என்ற புதிய விகிதாச்சாரத்திற்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோல … Read more

சாஹல் ஹாட்ரிக்- 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.  டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.  இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது.  துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 … Read more

2022 ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை: கொல்கத்தா அணிக்கு 218 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

“சசிகலா குறித்த முன்னாள் அமைச்சர்களின் கருத்து கட்சியின் கருத்தல்ல..!''- விளக்கும் கோவை செல்வராஜ்

அ.தி.மு.க-வில் இரண்டாம் கட்ட உட்கட்சித் தேர்தல் மிகத் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜைச் சந்தித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்… அதிமுக தலைமை அலுவலகம் “உட்கட்சித் தேர்தல் குறித்து கலந்தாலோசிக்க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகினவே?“ “அ.தி.மு.க-வில் ஜனநாயகரீதியில் சுதந்திரமாக அனைத்துத் தலைமைக் கழக நிர்வாகிகளும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அதைத் தலைவர்கள் பரிசீலிப்பதாகக் கூறினார்கள். காரசாரமான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. … Read more

கொஞ்சமா சாப்பிட்டாலும் வயிறு உப்பிடுதா? இதனை போக்க என்ன செய்யலாம் தெரியுமா?

பொதுவாக நிறைய பேருக்கு இரவில் நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்திருக்கும் போது வயிறு வீங்கியதாக ஒரு உணர்வு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் நம் குடல் மற்றும் வயிற்றில் வாயுக்கள் நிரம்பியதாலே இந்த பிரச்சினை உண்டாகிறது. இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் வயிற்று வலி, வயிற்றில் போக்கு போன்றவற்றை அனுபவிக்க கூடும். இதனை ஒரு சில எளிய முறையில் போக்கலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.   ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, அரை டீஸ்பூன் … Read more

எம்எல்எம் மோசடி: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

திண்டுக்கல்: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. எம்எல்எம் மோடி காரணமாக  திண்டுக்கல்லில்  உளள  ஆம்வே நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டடம், நிலம், உபகரணங்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளது. எம்எல்எம் எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டி சிஸ்டம் மூலம் இளையசமுதாயத்தினர் முதல் ஓய்வுபெற்ற முதியோர்களை வரை பலரை தனது கைகளுக்குள் வைத்து, பல்வேறு மோசடி திட்டங்களை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது ஆம்வே நிறுவனம். மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும் அழகுசாதனப் … Read more

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அஞ்சலி

சென்னை: மேகாலயா மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் தீனதயாளன் உடல் சென்னை வந்தடைந்த நிலையில், அதிகாரிகள் உடலை பெற்றுக்கொண்டனர். இதையடுத்து வேன் மூலம் சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு தீனதயாளனின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது.  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தீனதயாளனின் இல்லத்திற்கு நேரில் சென்று அரசு சார்பில் … Read more

274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னை: 274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரவையில் பேசினார். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவித்தார்.