பேரூராட்சிகளில் பொது நிதியை பயன்படுத்தும் உச்சவரம்பு உயர்வு- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிருவாகப் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- கோட்டையில் நாங்கள் உட்கார்ந்து கொண்டு, என்னதான் திட்டங்களைத் தீட்டினாலும், அந்த திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால், அதை மக்களுடைய உள்ளத்தில், மக்களுடைய கையில் கொண்டு போய்  சேர்க்க வேண்டுமென்று சொன்னால், அது உங்களால் தான் முடியும். அந்தப் பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்களை நம்பி அரசினுடைய திட்டங்களை … Read more

மாருதி சுசூகி கார்கள் விலை உயர்வு

டெல்லி: மாருதி சுசூகி நிறுவனம் அனைத்து மாடல் கார்கள் விலையையும் இன்று முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மாடல்களை பொருத்து 0.9% முதல் 1.9% வரை கார்களின் விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இனி வீட்டுக் கடன், கார் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிர்ணயிக்க பயன்படும் MCLR விகிதத்தினை, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் இந்த வட்டி அதிகரிப்பு நடவடிக்கை காரணமாக ஹோம் லோன், கார் லோன் உள்ளிட்ட பல கடன்களுக்கான மாத தவணை தொகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோம் லோன்: எஸ்பிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் இதுதான்..! MCLR என்றால் என்ன? MCLR … Read more

KGF 2 ராக்கிங் ஸ்டார் யஷ் தாடியை எடுத்ததற்கு மனைவியின் ரியாக்ஷன்… வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் நடிகர் யஷ் நீண்ட தாடியுடன், மிரட்டும் மேனரிசத்துடன் மாஸாக நடித்திருந்தார். அவரின் கெட்டப் ரசிகர்களைக் கவரும் படி இருந்து அது ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் மாறியது. இந்நிலையில் யஷ் தனது தாடியை எடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொலியில் யஷ் தனது தாடியை எடுக்கத் தயாராகும் போது அவரது மனைவி ராதிகா பண்டிட் … Read more

கனடாவில் ரயில் பாதையில் ஜாகிங் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

கனடாவில் ரயில் பாதையில் ஜாகிங் சென்ற ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக பலியானார். கால்கரியில், நேற்று மதியம் 1.00 மணியளவில் ஒருவர் ரயில் பாதையில் ஜாகிங் சென்று கொண்டிருக்க, பின்னால் ரயில் ஒன்று வந்துள்ளது. மக்கள் அவரை எச்சரிக்க குரல் எழுப்பியும் அவர் அதை கவனிக்கவில்லையாம். வேகமாக வந்த அந்த ரயில் அவர் மீது மோத, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார் அவர். 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது காதுகளில் இயர்போன் மாட்டியிருந்திருந்ததாக கூறப்படுகிறது. … Read more

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்…

சென்னை: 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது.  சபை கூடியதும் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம் இடம்பெற்றது. அப்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் டிபார்ட்டி புறக்கணிப்பு குறித்து அறிக்கை வாசித்தார். அதன்பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் … Read more

ஜோஸ் பட்லர் அதிரடி சதம்… கொல்கத்தா அணிக்கு எதிராக 217 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி … Read more

ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 218 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை: கொல்கத்தா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

போலீஸ் அதிகாரிகளுக்கு அயல்பணி கட்டாயமாக்க உள்துறை பரிந்துரை| Dinamalar

புதுடில்லி,-எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், மத்திய அரசுப் பணிக்கு அயல்பணியாக வருவதை கட்டாயமாக்கும்படி, பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது. ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பற்றாக்குறை உள்ளது. மாநில அரசுகள், தடையில்லா சான்றிதழ் அளித்தால் மட்டுமே, இந்த அதிகாரிகள், அயல் பணியாக மத்திய அரசு பணிகளுக்கு செல்ல முடியும் நிலை இருந்தது.இதையடுத்து, மத்திய அரசின் துறைகளில் இணைச் … Read more