புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்| Dinamalar

புதுடில்லி: புதிய ராணுவ தலைமை தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்ஜினியர் ஒருவர் இப்பொறுப்பை ஏற்கவிருப்பது இதுவே முதன்முறை ஆகும். ஜெனரல் பிபின் ராவத் இறப்புக்கு பின், இந்திய முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராகவும், ராணுவ தலைமை தளபதியாகவும் இருந்து வரும், எம்.எம்.நரவானே வரும் 30ம் தேதி ஓய்வு பெறவிருக்கிறார். இதனையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை, புதிய ராணுவ தலைமை தளபதியாக … Read more

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. வங்கி நேரத்தில் இன்று முதல் மாற்றம்.. !

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, இன்று முதல் வங்கிக்கான வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, ஏப்ரல் 18 முதல் வங்கிகள் காலை 9 மணிக்கே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கிகள் மூடப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வர்த்தக நேரத்தை மாற்றியது ரிசர்வ் வங்கி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை..! நேரம் அதிகரிக்கும் நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக பரவி வந்த நிலையில், வங்கிகளின் வேலை நேரத்தினை ரிசர்வ் வங்கி … Read more

“183 நாள்கள் பயணம்; நட்சத்திரங்களைத் தொட்டு வந்தேன் என மகளிடம் சொல்வேன்"- சீன விண்வெளி வீராங்கனை

சீனா தனி விண்வெளி நிலையத்தை (space station) உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தின் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, நிலவிற்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது சீனா. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி சென்ஸு-13 (Shenzhou-13) விண்கலம் மூலம் சை ஜிகாங் (Zhai Zhigang), எ குவாங்க்பு (Ye Guangfu) என்ற இரண்டு ஆண்கள், வாங் யாப்பிங் (Wang Yaping) என்ற பெண் என மூன்று விண்வெளி … Read more

30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி !உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

2022 ஏப்ரல் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். பின் இந்த ராசியில் இருந்து 2022 ஜூலை 12 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகர ராசிக்கு செல்லவிருக்கிறார். தற்போது 2022 சனி பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களைக் காண்போம். மேஷம் மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சம்பள … Read more

இளையராஜா கூறியது அவரது சொந்த கருத்து, அதுபற்றி திமுகவினர் யாரும் பேசக்கூடாது! உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இளையராஜா கூறியது அவரது சொந்த கருத்து, அவர் குறித்து எந்தக் கருத்தையும் திமுகவினர் கூறக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக எம்.எல்.ஏவும், திமுக இளைஞர் அணி தலைவருமான  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இன்று தனது தொகுதிக்குட்பட்ட  அண்ணாசாலை மன்வாரிய அலுவலகத்தில்   உடற்பயிற்சி மற்றும் உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவல்லிக் கேணி தொகுதியில்  புதியதாக அமைக்கப்பட்டுள்ள வளைய சுற்றுத்தர மின் அமைப்பினையும், சட்டக்கல்லூரி பெண்கள் விடுதி அருகே வளைய சுற்றுத்தர … Read more

மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை எப்போது நீக்குவீங்க? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: லக்கிம்பூர் கேரி வன்முறையில், மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது என  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த 2ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால், இந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்ததுடன், ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து மத்திய … Read more

அரசு தீட்டும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகிகளிடம் தான் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தந்தை பெரியார் எண்ணியவாறு இன்று பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி வருகிறோம். அரசு தீட்டும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகிகளிடம் தான் உள்ளது.

விப்ரோ இந்தியா தலைமை அதிகாரியாக சத்யா ஈஸ்வரன் நியமனம்| Dinamalar

பெங்களூரு: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம், இந்திய பிரிவு தலைமை அதிகாரியாக சத்யா ஈஸ்வரனை நியமனம் செய்துள்ளது. முன்னாள் கேபிஎம்ஜி எக்ஸிகியூடிவான சத்யா ஈஸ்வரன், மும்பை பல்கலையில் என்ஜினியரிங், லீவி ஸ்கூல் ஆப் பிஸினஸ், சான்டா கிளாரா பல்கலையில், எம்.பி.ஏ.,வும் முடித்திருக்கிறார். பெங்களூரு: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம், இந்திய பிரிவு தலைமை அதிகாரியாக சத்யா ஈஸ்வரனை நியமனம் செய்துள்ளது. முன்னாள் கேபிஎம்ஜி எக்ஸிகியூடிவான சத்யா ஈஸ்வரன், மும்பை ஊடக தர்மம் … Read more

குட் நியூஸ்.. சென்னையை தேடி வரும் டெக் நிறுவனங்கள்..!!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வருகிறது. இதோடு பிற மாநிலங்களில் இருந்தும் பல நிறுவனங்கள் சென்னைக்குத் தனது வர்த்தகத்தை மாற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முன்னணி நகரமாகச் சென்னை உயர்ந்துள்ளது. இலக்கை கோட்டை விட்ட சீனா.. ஜி ஜின்பிங்கிற்கு அதிகரிக்கும் நெருக்கடி..! சென்னை டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் தனது வர்த்தகத்தைச் சென்னையில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அலுவலகத்தையும் … Read more