செங்கம் சிப்காட், காஞ்சிபுரம் பயணியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்பேட்டை, விளையாட்டு மைதானம்: இன்றைய சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில்!

சென்னை: செங்கம் சிப்காட், காஞ்சிபுரம் பயணியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்பேட்டை, விளையாட்டு மைதானம் உள்பட சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு சட்டப்பேரவையில் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவீன தங்கும் விடுதி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். கேள்வி முடிந்ததும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு … Read more

கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை: மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18), உயிரிழந்தார்.  83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து … Read more

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை, தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விமுறை விட முடிவு. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்

இளையராஜாவை அவமானப்படுத்துவதா?: ஜே.பி.நட்டா கண்டனம்| Dinamalar

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் … Read more

8 நாட்கள் சுற்றுப்பயணம் மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை

மும்பை, இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தும் விதமாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் நேற்று முதல் 24-ந் தேதி வரை 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.  இந்த திட்டத்தின்படி நேற்று அவர் விமானம் மூலம் மும்பை வந்தார். அதிகாலை 1.20 மணி அளவில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.  பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வருகிற 19-ந் தேதி குஜராத் … Read more

1200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 2வருட சரிவில் இன்போசிஸ்..!

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள முதல் மரணம், ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர், 4 நாள் விடுமுறையில் வெளியான ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் காலாண்டு முடிவுகளின் எதிரொலிகள் இன்று மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. Apr 18, 2022 11:18 AM சென்செக்ஸ் குறியீடு 1249.81 … Read more

“இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா?” – ஜெ.பி.நட்டா கண்டனம்

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது.இந்த புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுத்தியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியது. இதையொட்டி, இந்த விவகாரத்தில், `நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். எனவே எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். என்னுடைய கருத்தை திரும்ப பெற மாட்டேன். … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில், மத்திய  அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதுடன், ஒரு வாரத்தில் சரணடையும் உத்தரவிட்டுள்ளது. லக்கீம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில், அவரது ஜாமினை எதிர்த்து காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த … Read more

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையும் படியுங்கள்…தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி – முதல்வர் ஸ்டாலின் … Read more

லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் ரத்து : உச்சநீதிமன்றம்

டெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.