ராமநாதபுரம்: வளைகாப்புக்கு மறுநாள்… மின்கம்பி அறுந்து விழுந்து கணவர் பலி! – கர்ப்பிணி கண்ணீர்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இதுவரை ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கலந்துரையாடினார். அதன்படி ராமநாதபுரம், பரமக்குடியில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயனடைந்த 366 விவசாயிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த காணெலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார். அப்போது கடந்த … Read more

அமைதி செழுமைக்காக இணைந்து இருக்கவேண்டும்: இந்தியாவிற்கு விரைவில் போரிஸ் பயணம்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தவாரத்தில் இந்தியாவுடனான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்காக அந்தநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்காக இந்த வாரத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எதேச்சதிகார அரசிடம் இருந்து நமது அமைதி மற்றும் செழுமைகளுக்காக எதிர்த்து நிற்கும் போது, ஜனநாயக நாடுகளுடனும் நட்பு நாடுகளுடனும் இணைந்து இருப்பது முக்கியம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார். … Read more

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆளுநர் முடிவு

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்த நிலையில், அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட 11 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இந்நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்து இருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி … Read more

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மரியுபோல் நகரம் அபாய கட்டத்தில் உள்ளதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி தகவல்

18.04.2022 06.30: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனில் போருக்கு பிந்தைய சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநருடன் விவாதிக்க ஜெலன்ஸ்கி  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 04.00: கார்கிவ் நகரத்தில் ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு  தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலால் குடியிருப்பு மற்றும் அரசு நிர்வாக கட்டிடங்கள் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,222,757 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.22 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,222,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 504,656,174 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 455,463,444 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,259 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நம்ம ரெய்னாவா இப்படி பண்ணாரு… ஒற்றை டிவீட்டால் நொந்து போன சென்னை ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் ட்விட்டர் பதிவை பார்த்து சென்னை அணி ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர். புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் ட்விட்டர் பதிவு மிகுந்த மனவேதனையை ரசிகர்களுக்கு தந்துள்ளது. சென்னை அணிக்காக 13 சீசன்களுக்காக விளையாடிவந்த சுரேஷ் ரெய்னா ரசிகர்களால் செல்லமாக சின்ன … Read more

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு பின்புறத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். இக்கோயில் மேற்கு திக்கு நோக்கி … Read more

ஏப்ரல்-18: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 21 முதல் 24-ந்தேதி வரை 4 நாட்கள் இரு பட்ஜெட்டுகள் மீதும் விவாதம் நடந்து முடிந்தது. இம்மாதம் 6-ந்தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more