லிவிங்ஸ்டோன் அரை சதம் – ஐதராபாத் வெற்றி பெற 152 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

மும்பை: ஐ.பி.எல். தொடரின் 28வது லீக் ஆட்டம் மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஷிகர் தவான் 8 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 14 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 11 ரன்னிலும் அவுட்டாகினர். … Read more

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு: ஏப்.21-ம் தேதி மீண்டும் ஆஜராக உள்ளார் டி.டி.வி.தினகரன்

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்.21-ம் தேதி மீண்டும் டி.டி.வி.தினகரன் ஆஜராக உள்ளார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் மீண்டும் ஆஜராக உள்ளார். ஏற்கனவே கடந்த 12-ம் தேதி டி.டி.வி.தினகரனிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 

“தமிழுக்கு போராடுவது போல நடிப்பது; இந்தியில் விளம்பரப்படுத்திக் கொள்வது!" – திமுக-வை சாடிய ஓ.பி.எஸ்

தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில் இந்தி மொழியை வளர்த்து வருகிறார் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் இதுகுறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மொழியை வளர்ப்பது என்பது பிற மொழி பேசுபவர்களைத் தமிழ் கற்றுக் கொள்ள வழிவகை செய்வதும், பெரும் மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையாகும். ஸ்டாலின் ஆனால், தமிழக முதல்வர் தன்னை வளர்த்துக் கொள்ளும் … Read more

புதிய வகை ஆயுதத்தை சோதனை செய்த வடகொரியா!

வட கொரியா அதன் அணு ஆயுதச் சண்டைத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய வகை தந்திரோபாய வழிகாட்டி ஆயுதத்தை சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இந்த ஆண்டு வடகொரியாவால் ஏவப்பட்ட 13-வது ஆயுத சோதனையாகும். Mach 4-க்கு கீழ் அதிகபட்ச வேகத்தில் சுமார் 68 மைல்கள் (110 கிமீ) பறந்ததாகக் கூறப்படும் தேவ்கனையை சோதனை செய்தபோது கிம் ஜாங் உன் கண்காணித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சோதனை நிகழ்வின்போது, நாட்டின் பாதுகாப்புத் … Read more

டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல்

ஹுப்ளி: டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.கலவரக்காரார்கள் சுட்டதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதே போன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த ஊரலத்தின் போது குவிந்த பக்தர்கள் கிளவ் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். … Read more

நிலத்தகராறில் மோதல்- நெல்லையில் 3 பேர் வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.  மோதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது

சென்னை: சென்னையில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 ஆசிரியைகளையும் விசாரணையின் பின்னர் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மெட்ரிகுலேஷன் இயக்குனர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் அதிக கொரோனா மரணங்களா?; மறுக்கும் மத்திய அரசு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 40 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய சுகாதார அமைச்சகம், ‛இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, வெவ்வேறு புவியியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டில், சிறிய நாடுகளில் பயன்படுத்தும் கணிதவியல் முறையில் கொரோனா மரணங்களை கணக்கிட முடியாது’ என கூறியுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் ‛நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் நேற்று (ஏப்.,16) உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கட்டுரையில், ‛இந்தியாவில் … Read more

தங்கம் இனி எப்படியிருக்கும்.. விலை குறையுமா.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்?

தங்கம் விலையானது கடந்த இரண்டு வாரங்களாகவே அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராமுக்கு 53,000 ரூபாய் என்ற லெவலில் கடந்த அமர்வில் முடிவடைந்தது. இதே வெள்ளியின் விலையானது 69000 ரூபாய் என்ற லெவலிலும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் வரும் வாரத்திலும் இந்த ஏற்றம் தொடருமா? அல்லது குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம். கவனம்.. பேவரைட் பங்கில் முதலீடு குறைப்பு.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிரடி.. ஏன்! … Read more

"கோவிந்தா,கோபாலா" கோஷத்துடன் சாத்தூர் வைப்பாறில் இறங்கிய அழகர்!-திரளான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோயிலில், சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சித்ராபெளர்ணமியை முன்னிட்டு, சாத்தூர் வைப்பாற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. சாத்தூர் வேங்கடாசலபதி திருக்கோயிலில் காலையில், வேங்கடாசலபதி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வேங்கடாசலபதிக்கு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அழகர் பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதியினா் இதில் சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான … Read more