உணவு டெலிவரி ஊழியரை நடுரோட்டில் ஷூவால் அடித்த இளம்பெண்… வைரலான வீடியோ – என்ன நடந்தது?

உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் Zomato, Swiggy, Uber போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் படித்த பட்டதாரி இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை, நடுரோட்டில் மக்கள் முன் இளம்பெண் ஒருவர் ஷூவால் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த … Read more

இதில் ஒன்றை தேநீருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.. நன்மைகள் ஏராளம்!

தேநீருடன் மாலைப்பொழுதில் எந்தெந்த சிற்றுண்டியை சேர்த்து சாப்பிட்டால் நன்மை கிடைக்கும் என்பது குறித்து இங்கு காண்போம். நாம் எந்த வகையான ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை தினசரி தேநீருடன் இணைக்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மதிய உணவுக்கும், இரவு உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் பசி மிகவும் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் எந்தெந்த ஆரோக்கியமான தின்பண்டங்களை தேநீருடன் சேர்த்து சாப்பிடுவது என்பது குறித்து இங்கு காண்போம்.  மக்கானா தேநீர் அல்லது காபிக்கு சரியான துணையாக இருக்கும் ஆரோக்கியமான உணவு … Read more

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடக்கம் – கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடக்கம் செய்யப்பட்டதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் ஆயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை முதல் 2 வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா

சியோல்: வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இந்நிலையில், ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா … Read more

போலி ஆவணத்தை பயன்படுத்தி நிலம் விற்பனை: சார் கருவூல கணக்காளர், அவரது தந்தை ஆகியோர் கைது

இராணிப்பேட்டை: அரக்கோணத்தில் போலி ஆவணத்தை பயன்படுத்தி நிலத்தை விற்பனை செய்த சார் கருவூல கணக்காளர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் தணிகை போளூர் பகுதியில் 2.96 ஏக்கர் நிலத்தை ரூ.40 லட்சத்திற்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளனர். முன்னாள் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இளங்கோவிடம் நிலத்தை விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி| Dinamalar

புதுச்சேரி : ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடந்தது.இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவது கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவகாலத்தினை கடைபிடிப்பது வழக்கம்.கடந்த மார்ச் 2ம் தேதி கிறிஸ்துவர்களின் தவக்காலம் துவங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தநாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது. புனித வெள்ளியான 15 ம்தேதி கிறிஸ்துவ ஆலயங்களில் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் சிலுவைபாதை நிகழ்ச்சி நடந்தது.ஈஸ்டர் … Read more

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முடிவென்ன?

தனியார் துறையை சேர்ந்த மிகபெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி அதன் 4ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. எனினும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கும் விதமாக டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. எனினும் இது குறித்தான விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்ச் 31, 2022ம் நிதியாண்டிற்காக டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு வரலாம் என்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டதா.. கட்டாயம் இதை செய்யுங்க.. ! வங்கி குழு கூட்டம் இவ்வங்கியின் குழு கூட்டம் … Read more

தூத்துக்குடி பாகம்பிரியாள் திருக்கோயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரதவீதிகளில் வலம் வந்த திருத்தேர்!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. திருத்தேர் கயத்தாரைத் … Read more

டேவிட் வார்னர் விக்கெட்டை தட்டிதூக்கிய வனிந்து ஹசரங்கா! ஏற்று கொள்ளமுடியாமல் அழுத மகளின் வீடியோ

ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் அவுட்டானதை ஏற்று கொள்ள முடியாமல் அவர் மகள் அழுத வீடியோ வெளியாகியுள்ளது. 27வது லீக் போட்டியில் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. இப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டெல்லி வீரர் டேவிட் வார்னர் 66 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வார்னர், வனிந்து ஹசரங்காவின் பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடிக்க முயற்சி செய்தார். pic.twitter.com/MueGBfDeOf … Read more

விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கருப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன். இவர் தன்னுடைய விளைநிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டப் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டாா். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி சடலத்துடன், தருமபுரி – பென்னாகரம் சாலையில், ஏ.செக்காரப்பட்டியில் அப்பகுதியைச் சோ்ந்த அதிமுக, பாமக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் … Read more