ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் 15 மணிநேரம் காத்திருப்பு| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், 15 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருமலையில் குறைந்திருந்த பக்தர்களின் வருகை, தற்போது தேவஸ்தானம் வெளியிட்டு வரும் தரிசன டிக்கெட்டுகளால் அதிகரித்து வருகிறது.வார இறுதி நாட்களில் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில், 70 ஆயிரத்தை தொடுகிறது.திருமலை வைகுண்டத்தில் உள்ள 16 காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். … Read more

5,500 அடி உயரத்தில் சித்திரை முழுநிலவுத் திருவிழா; கண்ணகி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேற்குத்தொடர்ச்சிமலை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்குக் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் பக்தர்கள் கேரளாவின் குமுளியில் … Read more

பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பொறுப்பு துணைநிலை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி தமிழிசையும் இங்கு வந்து அவருக்கு இடப்பட்ட வேலையை முடித்தார். அதன்பிறகு தேர்தலின்போது … Read more

5,000 பேர்கள் வெளியேற்றம்… மொத்தமாக அழிந்த 200 வீடுகள்: வெளிவரும் பகீர் சம்பவம்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பற்றியெரியும் காட்டுத்தீயால் இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கன மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். ருய்டோசோ கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 200க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளது. சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில், 9.6 சதுர மைல் தொலைவுக்கு வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. அதிக மின் அழுத்த கம்பிகளால் நியூ மெக்சிகோ தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், குடியிருப்பு ஒன்றில், மொத்தமாக உடல் கருகிய … Read more

தெலுங்கானா கவர்னர் தமிழிசையை மாற்ற முடிவு?- பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் நியமிக்க வாய்ப்பு

சென்னை: தெலுங்கானா மாநில கவர்னராக தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 1.9.2019 அன்று நியமிக்கப்பட்டார். தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. இரு மாநில கவர்னராகவும் தற்போது பணியாற்றி வருகிறார். தெலுங்கானா மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சுமூகமான உறவு இல்லை. எனவே அவர் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் அவசர அழைப்பின் … Read more

இந்திய அணிக்குள் நுழைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்: தினேஷ் கார்த்திக்

மும்பை: இந்திய அணிக்குள் நுழைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், இது அதன் ஒரு படி என அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். நடப்பு ஐபில் தொடரில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்காக 66 ரன்கள் விளாசிய அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக், நான் கடினமாக உழைக்கிறேன் எனவும் என்னுடைய ஆசையெல்லாம் இந்த நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார்.

வில்லியனூரில் ஆன்மிக நடைபயணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு| Dinamalar

வில்லியனுார் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நேற்று நடந்த ஆன்மிக நடைபயணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.வில்லியனுாரில் பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும், 18 சித்தர்கள் ஜீவ சமாதியும் அமைந்துள்ள ஆன்மிக பூமியாக திகழ்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போல, கடந்த மார்ச் 17ம் தேதி பவுர்ணமி நாளில், திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து முதன் முறையாக ஆன்மிக நடைபயணம் துவங்கியது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் … Read more

இந்தியாவுக்கு கிரேட் சான்ஸ்.. ரஷ்யாவின் அணுகலுக்கு பலன் கிடைக்குமா?

ரஷ்யா – உக்ரைனுக்கு மத்தியில் , ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் ரூபிள் மதிப்பானது மிக மோசமாக வலுவிழந்து காணப்படுகின்றது. மேலும் பொருளாதார தடை அறிவிப்புகளினால் அன்னிய செலவாணி கரன்சியான ரூபிள் மதிப்பிலேயே ரஷ்யா செலுத்தி வருகின்றது. இதனால் கடன்களை தொடர்ந்து திருப்பி செலுத்த முடியாமல் போகலாம். இது வாரக்கடனாக மாறிவிடும் என மூடீஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதுமட்டும் அல்ல மே 4ம் … Read more

"இனி நீங்கள் 'Tata Neu' ஆப் மூலம் டாடாவின் கார்களை வாங்கலாம்" -டாடா டிஜிட்டல் CEO!

அண்மையில் டாடா நிறுவனம் ‘டாடா நியூ (Tata Neu)’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏர் இந்தியாவின் விமான டிக்கெட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியது. மேலும் பண பரிவர்த்தனை செய்துகொள்ளும் டாடா வாலட்டையும் (Neu digital wallet) அறிமுகப்படுத்தியது டாடா. அதைத்தொடர்ந்து தற்போது டாடா மோட்டார்ஸின் கார்களை டாடா நியூ செயலியைப் பயன்படுத்தி வாங்கும் வசதியை கொண்டுவரவுள்ளது. மேலும் ‘தனிஷ்க்(Tanishq)’, ‘ஏர் இந்தியா (Air India)’, … Read more

டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது – மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.கலவரக்காரார்கள் சுட்டதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் *தவறு செய்தவர்கள் மீது மத்திய அரசு … Read more