வேலூர் அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

வேலூர்: வேலூர் அருகே செதுவாலை பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களுருவில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வன விலங்குகளை விரட்ட நவீன கருவி| Dinamalar

திருவனந்தபுரம் : விலங்குகளை விரட்ட, கேரளா வனத்துறை சார்பில், விவசாயிகளுக்கு ‘கார்பைடு கன்’ வழங்கப்படுகிறது. கேரளாவின், மறையூர் பகுதிகளில், யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள், கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையிலும், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், வனத்துறை நவீன கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.’கார்பைடு கன்’ எனப்படும் இந்தக் கருவியில் வனத்துறை வழங்கும் கார்பைடு பொருளை வைத்து, துப்பாக்கி போல் சுட்டால், அதிக ஒலி … Read more

மொரீஷியஸ் பிரதமர் 8 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகை

புதுடெல்லி, மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான 17-ந்தேதி(இன்று) அவர் இந்தியாவிற்கு வருகை தருகிறார். அவருடன் அவரது மனைவி கோபிதா ஜுக்நாத் உடன் வருகிறார்.  இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாகவும், அவர் டெல்லி, குஜராத், வாரணாசி உள்ளிட்ட இடங்களிலுக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வட இந்தியாவில் விற்கமுயன்ற நடராஜர் சிலை… தஞ்சாவூரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியைச் சேர்ந்த பிரபாகரன் (27), பைசல் அகமது(27), அய்யம்பேட்டை சக்கரா பள்ளியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (26) ஆகிய மூன்று இளைஞர்கள் உலோக நடராஜர் சிலை ஒன்றைக் கடத்தி வைத்துக் கொண்டு விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்ட நடராஜர் சிலை இதனை தொடர்ந்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பைபாஸ் ரோட்டில், கடத்தப்பட்ட சிலையை விற்பனை செய்வதற்கான … Read more

ஒவரின் ஆறு பந்துகளையும் சிக்சர்கள், பவுண்டரிகளாக நொறுக்கிய தினேஷ் கார்த்திக்! மிரண்டு நின்ற பவுலர்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசி கெத்து காட்டியுள்ளார் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக். இப்போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முக்கியமாக தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் தான் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. அவர் 34 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களும் அடக்கம். அதிலும் டெல்லி அணி பந்துவீச்சாளர் முஸ்தவிசுர் ரகுமானின் … Read more

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு சாத்தியமா?

சென்னை: 7.5% இடஒதுக்கீட்டின் கீழ், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த முனுசாமி என்ற 63 வயதுடைய அரசுப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்ற தனக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், … Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு

தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலம் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு … Read more

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 66 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஐயன் மற்றும் பாபு ஆகியோரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

சீன மொழியை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்

புதுடெல்லி, எல்லை பிரச்சினை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், 2020ம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதன் விளைவாக, லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.  எனினும், இதர பகுதிகளில் இருந்து வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில், சீன வீரர்களின் உத்திகளையும், … Read more

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், இலங்கையின் தமிழ் பகுதிகளில் போராட்டங்கள் வெடிக்காதது ஏன்?!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயர்ந்ததோடு, அனைத்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி காரணமாக அங்கு, ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் இலங்கையின் தென் பகுதிகளில் மட்டுமே பெரிய அளவில் நடந்துவருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணங்களில் இதுபோன்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற செய்திகளே அங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? சிங்களர்களோடு கைகோர்த்த … Read more