இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா?- கவர்னர் தமிழிசை வேதனை

சென்னை: தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இணையற்ற இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரத பிரதமரை, அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதில் இருந்து வெளிவந்த உணர்வுகளை வெளியிட்டதற்காக இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்க சொல்வோம். … Read more

எஸ்.சி., – எஸ்.டி., பிரதிநிதித்துவம் பற்றிய தரவுகளை சேகரிக்க உத்தரவு!  மத்திய அரசு துறைகளுக்கு பணியாளர் நல அமைச்சகம் கடிதம்

பதவி உயர்வில் எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அவர்களின் பிரதிநிதித்துவம் பற்றி தரவுகளை சேகரித்து தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு துறைகளுக்கு பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கீழுள்ள 90 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இட ஒதுக்கீடு பட்டியல்இதில், மத்திய செயலக பணியில் மட்டும் ௬,௨௧௦ அதிகாரிகள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு … Read more

வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்- தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய கலாச்சாரம் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்திராவில் நடந்த உத்தர் பாரதிய சங் பவன் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- மும்பையில் 3, 4 தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறிவிட்டனர். மும்பையில் உள்ள டாடா புற்று நோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகின்றனர். அப்போது அவர்கள் தங்கும் இடம் போன்ற வசதிகள் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இந்த பவன் … Read more

சென்னை-க்கு இனி பொற்காலம்.. பெங்களூரை விரைவில் ஓரம்கட்டும்..!

இந்தியாவில் ஸ்டார்ட்அப் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பெங்களூரு, டெல்லி ஆகியவை முதல் இரண்டு இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 2021 ஆண்டின் பாதியில் இருந்து இந்தியாவின் பிற முக்கியமான நகரங்களில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான முதலீட்டைப் பெற்று தாறுமாறான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சென்னை குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு அடுத்த ஜாக்பாட்.. ஜோஸ்ட் இந்தியா … Read more

24 மணி நேர இடைவெளியில் எஸ்.டி.பி.ஐ, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கொலை… பதற்றத்தில் கேரளம்!

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த எலப்புள்ளி குப்பையோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபைர்(43). எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் நிர்வாகியாக இருந்துள்ளார். இந்த நிலையில், சுபைர் நேற்று முன் தினம் மதியம் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தன் தந்தை அபுபக்கரையும் அழைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். எலப்புள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சுபைரின் பைக் மீது திடீரென ஒரு கார் மோதி உள்ளது. பைக்கில் இருந்த சுபைரும், அவர் தந்தையும் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் … Read more

என்னை வெளியேற்றுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி: ஒலிம்பிக் வெற்றி வீராங்கனை வேதனை !

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து வெளியேறியதன் காரணத்தை இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மனம் திறந்து தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாட்டில் நடைபெற்ற தொடர் போட்டிகளில் விளையாண்டு வந்த சாய்னா நேவால் தற்போது தான் தாயகம் திரும்பியுள்ளர், என்பதால் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான தகுதி சுற்றுபோட்டியில் தன்னால் கலந்துகொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார். தகுதி சுற்றுப்போட்டில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்ததால் இரண்டு வாரங்களில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மற்றும் … Read more

தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் ஆய்வு நடத்தப்படும் – அமைச்சர் சாமு.நாசர்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் சாமு.நாசர் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் பால் பண்ணையிலிருந்து விநியோகஸ்தர்கள் மூலம் கொண்டு வரப்படும் பால்பாக்கெட் வண்டியை சோதனை நடத்தியதில் கூடுதலாக எடுத்து வரப்பட்ட ரூபாய் இரண்டாயிரத்தி 484 ரூபாய் மதிப்புள்ள 106 பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கொரட்டூரில் பால் வண்டியை வழிமறித்து அமைச்சர் சாமு.நாசர், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் … Read more

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது வல்லுநர் குழு

சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது. உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் அரசு உறுதியளித்துள்ளது.

வெப்பத்தை தாங்கும் தடுப்பூசி இந்திய நிறுவனம் கண்டுபிடிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :கொரோனாவுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாக்கப்படும் நிலையில், வெப்பத்தை தாங்கக் கூடிய புதிய தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது.கொரோனாவுக்கு எதிராக தற்போது உலகெங்கும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை, குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதனால் கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் மையமும், ‘மின்வாக்ஸ்’ என்ற உயிரிதொழில்நுட்ப நிறுவனமும் … Read more

மராட்டிய மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

இடைத்தேர்தல் மராட்டிய சட்டசபையில் கோலாப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சந்திரகாந்த் ஜாதவ் இருந்தார். காங்கிரசை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ ஜாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. பா.ஜனதா சார்பில் சத்யஜித் போட்டியிட்டார். … Read more