ஊடக பதிவுக்கு கட்டுப்பாடு; அரசு நிறுவனம் புது விளக்கம்| Dinamalar

மும்பை : சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழுள்ள தன்னாட்சி நிறுவனமான, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் புதிய விளக்கம் அளித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் சார்பில், சமீபத்தில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.அதில், சமூக ஊடகங்களில், அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஊழியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இது குறித்து இந்த மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சமூக … Read more

17/04/2022 இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 17/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

சீறிப்பாய்ந்த பந்தை ஒற்றை கையில் பாய்ந்து பிடித்த விராட் கோலி: திகைத்துப்போன அனுஷ்கா சர்மா!

சீறிப்பாய்ந்த பந்தை ஒற்றை கையில் பாய்ந்து பிடித்து அசத்திய பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 27வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை தோற்கடித்தது இருக்கும் நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிடித்த கேட்ச் … Read more

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதித்த ரஷியா

16.04.2022 19.30: லிசிசான்ஸ்க் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ரஷியப் படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். தாக்குதலின் போது சுத்திகரிப்பு ஆலையில் எரிபொருள் இல்லை என்றும் எண்ணெய் கழிவுகள் தீப்பற்றி எரிவதாகவும் அவர் கூறினார்.  18.15: பெலாரசில் இருந்து புறப்பட்ட ரஷிய போர் விமானங்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் பகுதியில் ஏவுகணைகளை வீசியதாகவும், அங்கு உக்ரைன் வான் பாதுகாப்பு படையினரால் … Read more

மாஜி அதிகாரிக்கு எதிரான சுற்றறிக்கையை நீக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : ‘அம்னெஸ்டி இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிரான, தேடப்படும் நபர் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெறும்படி, சி.பி.ஐ.,க்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ‘மன்னிப்பு கேட்கத் தேவையில்லை’ என கூறியுள்ளது.வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் மோசடி செய்ததாக, அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் படேலுக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு எதிராக, தேடப்படும் நபர் என்ற சுற்றறிக்கையை சி.பி.ஐ., பிறப்பித்தது. இதையடுத்து, … Read more

DC vs RCB: இந்தியாவுக்கான புதிய ஃபினிஷரா தினேஷ் கார்த்திக்? மூன்றாவது இடத்தில் பெங்களூர்!

எதுவும் எப்போதும் நிரந்தரமில்லை என்பதையே இந்த ஐபிஎல் உணர்த்தி வருகிறது. சாம்பியன் அணிகளான சென்னையும், மும்பையும் அதளபாதாளத்தில் இருக்கின்றன. புதிய அணிகளான குஜராத்தும், லக்னோவும் டாப்பில் இருக்கின்றன. சென்னை நிலைமையே தேவலாம் என்கிற நிலையில் இருக்கிறது மும்பை. விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி. இதற்கு முன்னர் இப்படித் தொடர்ச்சியாக ஆறு போட்டிகள் தோற்ற அணிகள், 2013ல் டெல்லி டேர்டெவில்ஸும், 2019ல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரும்தான். அந்த இரண்டு அணிகளுக்கும் அந்தந்த சீசனில் கடைசி இடம்தான் கிடைத்தது. மும்பைக்கு … Read more

டெல்லியை ஓடவிட்ட தினேஷ் கார்த்திக்: வெற்றிக்கணக்கை தொடரும் ராயல் சேலஞ்சர்ஸ்!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 27வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்க பெங்களூரு அணியை அழைத்தது. இதைத்தொடர்ந்து முதலில் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கமே அடுத்தடுத்து முக்கிய விக்கெட்களை இழந்து … Read more

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது கல்வீச்சு- போலீசார் உள்பட பலர் படுகாயம்

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்து.  மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப் பட்டன. கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் … Read more

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணியை எதிர்நோக்கி காத்து கிடக்கிறார்கள். இவர்களுக்கு தேர்வு மூலம் நியமனம் வழங்குவது பொருத்தமற்றதாக அமையும். எனவே, பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூன்றடி இளைஞருக்கு 35 நிறுவனங்களில் வேலை| Dinamalar

குவாலியர் : வேலை கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருந்த உயரம் குறைந்த வாலிபருக்கு, சமூக வலைதள பதிவு காரணமாக, 35 நிறுவனங்கள் வேலைக்கு அழைப்பு விடுத்துஉள்ளன.கேலி, கிண்டல்மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குவாலியரைச் சேர்ந்த அங்கேஷ் கோஷ்தி, 3.7 அடி உயரம் கொண்டவர். அதனால், குழந்தை பருவத்தில் இருந்தே கேலி, கிண்டலுக்கு ஆளானார். இதை மீறி, அவர் பட்டப் படிப்பை முடித்து, 2020லிருந்து வேலை தேடி அலைகிறார். … Read more