ரயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்படாமல் உள்ள ரயில்வே திட்ட பணிகளை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த கோரியும், இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர கோரியும், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் காரணை ராதா தலைமை  தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த … Read more

தபால் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை| Dinamalar

புதுடில்லி : நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில், ‘க்யூ ஆர் கோட்’ வாயிலாக பணம் செலுத்தும் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.மத்திய அரசு, ‘டிஜிட்டல்’ முறையிலான பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பெரிய வணிக வளாகங்கள் முதல், சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை, க்யூ ஆர் கோட் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வர்த்தகர்கள் பணம் பெறுகின்றனர். இனி தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வசதி செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, நாடு முழுதும் உள்ள … Read more

25 தொகுதிகளைக் குறிவைக்கும் தமிழக பாஜக… அண்ணாமலையின் 2024 இலக்குதான் என்ன?

தமிழக பாஜக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூரில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்குத்தான் தமிழக மக்கள் வாக்களிக்கவுள்ளனர். அந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறுவது உறுதி. இந்த வெற்றி கிடைத்தால் கண்டிப்பாக மத்தியில் போராடி ஐந்து மத்திய அமைச்சர்களைப் பெற்றுத் தருவது என்னுடைய பொறுப்பு. அண்ணாமலை ஒருவேளை திமுக வெற்றிபெற்றால் … Read more

மரியுபோலிருந்து உக்ரைன் ராணுவ வீரர்கள் நீக்கப்பட்டால்…ரஷ்யாவிற்கு ஜெலன்ஸ்கி இறுதி எச்சரிக்கை!

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து உக்ரைனிய ராணுவ வீரர்களை ரஷ்ய ராணுவம் நீக்கினால் அனைத்து அமைதி பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் என அந்தநாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 51 நாள்களை கடந்து ராணுவ தாக்குதலை நடத்திவரும் நிலையில், அந்தநாட்டின் முக்கிய நகரங்களின் மீது மீண்டும் தனது ஷெல் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தலைநகர் கீவ்-வை சுற்றியுள்ள பிறப்பகுதிகளில் ரஷ்யா நடத்திவரும் ஷெல் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி … Read more

பேருந்து நிறுத்தங்களை அறிவிக்க பேருந்துகளில் ஒலிப்பெருக்கி அமைக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: பேருந்து பயணத்தின்போது, பயணிகள் பேருந்து நிறுத்தங்களை அறிந்துகொள்ளும் வகையில் பேருந்துகளில் ஒலிப்பெருக்கி அமைக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழகத்தில் பேருந்துகளில் பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் வகையில் காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போத ஒலிப்பெருக்கி அமைக்கப்படும் என தெரிவித்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க … Read more

ஐபிஎல்: 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.  இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.  தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் டக் அவுட்டானார். கேப்டன் டு பிளசிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார்.  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் … Read more

`பாஜக, ஆர்எஸ்எஸ் தூண்டிவிட்ட வெறுப்புக்கு ஒவ்வொரு இந்தியரும் விலை கொடுக்கிறார்கள்!' – ராகுல் காந்தி

சோனியா காந்தி ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அந்த கட்டுரையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்து, அதில் பாஜகவைச் கடுமையாக சாடியுள்ளார். நம்மிடையே ஒரு வைரஸ் பரவுகிறது என்ற தலைப்பில் சோனியா காந்தி கட்டுரை எழுதியுள்ளார். பாஜகவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள், வெறுப்புணர்வு அதிகரிப்பு, ஆவேசப்போக்கு ஆகியவை அதிகரித்துள்ளன. வெறுப்பு, மதவெறி, சகிப்பின்மை மற்றும் பொய்யின் பேரழிவு நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசதம் கார்கோனில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் … Read more

பிரித்தானிய கைதிக்கு மாற்றாக…ரஷ்ய சார்பாளர் மனைவியின் ஒப்பந்தம்: போரிஸ் செய்வாரா?

ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட பிரித்தானிய பிணைக்கைதி ஐடன் அஸ்லினுடன் ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கை பரிமாறி கொள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் உதவவேண்டும் என மெட்வெட்சுக்கின் மனைவி மார்ச்சென்கோ கோரிக்கை முன்வைத்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாக உக்ரைனில் வசித்து வந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கை அந்த நாட்டு ராணுவம் வீட்டுக்காவலில் அடைத்தது. இதையடுத்து உக்ரைனில் ரஷ்ய நடத்திய பயங்கரமான தாக்குதலின் போது அவர் வீட்டு … Read more

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம்

ஹைதராபாத்: போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ், தனது காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இது போக்குவரத்து விதிமுறை மீறலாகும். இதையடுத்து அவருக்கு ஹைதராபாத் போலீசார் நடிகர் பிரபாஸுக்கு ஆயிரத்து 450 ரூபாய் அபராதமாக விதித்தனர். இதே போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராகுல் அதிரடி சதம்: 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ- தொடர் தோல்வியை தவிர்க்குமா மும்பை

ஐபிஎல் கிரிக்கெட்டில் 26 லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். மும்பை அணியின் பந்து வீச்சை லக்னோ அணி பேட்டர்கள் நான்கு திசைகளிலும் விளாசி தள்ளினர். 13 பந்தில் 1 சிக்சர் 4 பவுண்டரிகள் அடித்த டி காக் 24 ரன்னில் ஆலன் … Read more