சென்னையில் விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.   திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்காக உற்சவர் சுவாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டன. பண்டிதர்களும் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டனர். மாலையில் வேத பாராயணத்தைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு, பெருமாளையும் தாயாரையும் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக ஆங்காங்கே பெரிய … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை: ரஷ்ய அரசு அறிவிப்பு

மாஸ்கோ: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்தது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்த நிலையில் ரஷ்யா நடவடிக்கை எடுத்தது. உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டது.

சிவகுமார் குழி பறிப்பார்! சித்துவுக்கு ரேணுகாச்சார்யா எச்சரிக்கை| Dinamalar

பெங்களூரு : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பக்கத்தில் அமர்ந்துள்ள அந்த பெரிய தலைவர், சித்தராமையாவுக்கு குழி பறிக்கக்கூடும். முதுகில் குத்துவதற்கு முன் சித்தராமையா சுதாரிக்க வேண்டும்’ என முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா எச்சரித்தார்.இது தொடர்பாக, அவர் நேற்று கூறியதாவது:அதிகாரத்துக்காக முட்டி மோதும் சிவகுமார், எங்கோ அமர்ந்தபடி, வேறொரு இடத்தில் குண்டு வைக்கும் கலையை கற்று தேர்ந்துள்ளார். எதிர் வரும் நாட்களில் அது, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், காங்., முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் கழுத்தையே நெரிக்கும். அதற்கு … Read more

பிரசாந்த் கிஷோர் ரீ என்ட்ரி… நேரடி அரசியலைக் கையில் எடுக்க வாய்ப்பு! மீட்சி பெறுமா காங்கிரஸ்?

தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீட்சி பெறச் செய்யும் தேவதூதராக அவரையே நம்பியிருக்கிறது. ஏப்ரல் 16-ம் தேதி சோனியா காந்தியின் 10, ஜன்பத் இல்லத்துக்கு பிரசாந்த் கிஷோர் வந்தபோது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. ராகுல் காந்தியும் அருகே இருக்க, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 10 … Read more

உக்ரைனில் ஒரு நகரமே சிதைந்து கிடக்கும் பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் காட்சி

 உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவை மரியுபோல் நகர கவுன்சில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரியுபோல் நகர சபையால் வெளியிடப்பட்ட புதிய வீடியோ காட்சிகள், நகரின் கிழக்கு குடியிருப்பு மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சிதைந்து கிடப்பதை காட்டுகிறது. தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு துறைமுக நகரமான மரியுபோல், ரஷ்யாவின் போரின் தொடக்கத்தில் இருந்து அதிக குண்டுவீச்சுக்கு ஆளாகி உள்ளது.மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. … Read more

இங்கிலாந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ரஷியாவுக்குள் நுழைய தடை

மாஸ்கோ: உக்ரைன் போர் நிலைப்பாடு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியா மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்துள்ளது,  மேலும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள ரஷ்யா பல்வேறு நாட்டு தலைவர்கள் ரஷ்யா வர … Read more

தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் அதிரடி – டெல்லி வெற்றி பெற 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

மும்பை: ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.  தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் டக் அவுட்டானார். கேப்டன் டு பிளசிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் … Read more

அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை தரக்கோரி ஒன்றிய சுகாதாரத்துறைக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்

சென்னை: அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை தரக்கோரி கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாவில் 24 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது. மாநில கோட்டாவில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 4 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 14 இடங்களும் காலியாக உள்ளநிலையில், மாநில கோட்டாவுக்கு தரவும் கலந்தாய்வு நடத்தவும் அனுமதி கோரி ஒன்றிய சுகாதாரத்துறைக்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதினார்.

சீன மொழியை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்| Dinamalar

லே: சீன ராணுவத்தினரின் உத்திகளை அறிந்துகொள்ள, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, சீன மொழியான, ‘மாண்டரினை’ பயிற்றுவிக்க, இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், 2020ம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.இதன் விளைவாக, லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ … Read more

தமிழ்நாட்டுக்கு அடுத்த ஜாக்பாட்.. ஜோஸ்ட் இந்தியா புதிய தொழிற்சாலை..!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைத் துவங்கியும் விரிவாக்கம் செய்தும் வரும் நிலையில் சென்னையில் வணிக வாகனங்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் உலகளாவிய நிறுவனமான ஜோஸ்ட் இந்தியா புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. சென்னை தமிழ்நாட்டின் முக்கிய உற்பத்தி தளமாக இருக்கும் நிலையில் ஜோஸ்ட் இந்தியா பிரம்மாண்ட உற்பத்தி தளத்தை உருவாக்க உள்ளது. ஹோம் லோன்: எஸ்பிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் இதுதான்..! ஜோஸ்ட் இந்தியா கிரீன்பேஸ் … Read more