உலகின் சிறந்த மருத்துவ கல்லூரிகளில் சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு 60வது இடம்

சென்னை: உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி 60-வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலை வணிக இதழான சிஇஓ வேர்ல்டு இதழ் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் ஹார்வேர்டு மருத்துவக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பிடித்துள்ளது. முதல் 21 இடங்களையும் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களே பிடித்துள்ளன.  இந்நிலையில், 22-வது இடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும், 37-வது இடத்தில் புனே … Read more

சென்னை வாகன சோதனையில் உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் மீது 365 வழக்குகள் பதிவுசெய்து அபராதம் விதித்தது போக்குவரத்து காவல்துறை

சென்னை: சென்னையில் நடைபெற்ற வாகன சோதனையில் உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது. உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.  

சித்ரா பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் | Dinamalar

வில்லியனுார், : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு இன்று மாலை ஆன்மிக நடைபயணம் மேற்கொள்கின்றனர்.புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில் பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதனை சுற்றி பிரசித்தி பெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்கள் ஜீவ சமாதிகள் அமைந்துள்ள ஆன்மிக பூமியாக திகழ்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போல, கடந்த பவுர்ணமி அன்று திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து முதன் முறையாக ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனர்.சித்ரா பவுர்ணமி என்பதால், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல … Read more

`இது என் குழந்தை, நான்தான் அனைத்தையும் வடிவமைப்பேன் என்பதில் நம்பிக்கையில்லை!' – பிரியங்கா சோப்ரா

பாலிவுட் முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவும், பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியரான நிக் ஜோனாஸும், வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை ஜனவரி மாதம் வரவேற்றனர். அப்போது, அந்த பெர்சனல் தருணத்தில் தங்களுக்கான பிரைவசியை எதிர்பார்ப்பதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அன்றிலிருந்து குழந்தையின் புகைப்படத்தைகூட சமூக ஊடகத்தில் அவர்கள் பதிவிட்டதில்லை. இந்நிலையில் முதன்முறையாக குழந்தை வளர்ப்பு குறித்து தன்னுடைய பார்வையை மனம் திறந்து பேசி உள்ளார், பிரியங்கா.  Priyanka Chopra `நோ மேக்கப்’ லுக், ஹேண்ட்மேடு காஸ்ட்யூம்… … Read more

இவருக்கு எதற்கு 15 கோடி? மும்பை வீரரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

ஐபிஎல்லில் தொடர்ந்து சொதப்பி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷனால் ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். 2022 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 15.25 கோடி என மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்டார். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் தவறி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 200 ஓட்டங்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ரோகித் சர்மா 6 ஓட்டங்களில் வெளியேற, ப்ரேவிஸ் 31 (13) ஓட்டங்கள் விளாசி … Read more

16/04/2022: தமிழ்நாட்டில் இன்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. எந்தவித உயிரிழப்புமின்றி 26 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 14,053  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6,59,22,451 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று  23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,233 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் ஏற்படாத … Read more

மும்பைக்கு 6வது தோல்வி – 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ

மும்பை: ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது.  அதிரடியாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை … Read more

சசிகலா, இளவரசி பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு

சென்னை: சசிகலா, இளவரசி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது. சொகுசு வசதி பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று வழக்கு விசாரணையின்போது சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.  

3 மாதத்தில் ரூ.10000 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தும் ஹெச்டிஎப்சி வங்கி..!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி தனது வீட்டு கடன் சேவை பிரிவான ஹெச்டிஎப்சி-ஐ இணைக்க முடிவு செய்த பின்பு ரீடைல் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது. கைவிட்ட சீனா.. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் இலங்கை.. பில்லியன் கிடைக்குமா? இந்த நிலையில் இன்று ஹெச்டிஎப்சி வங்கி தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி லாபம் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 22.8 சதவீத வளர்ச்சியில் 10,055.20 … Read more

“மதரீதியாக பிரித்தாளும் முயற்சிகளை முறியடிப்போம்!” – எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டறிக்கை

பிரித்தாளும் முயற்சிகளை முறியடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார், சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா, ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “மதரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து அமைதி காக்க வேண்டும். நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையை கண்டிக்கிறோம். நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள் கவலை … Read more