நாளை வரை கர்நாடகாவில் மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு| Dinamalar

பெங்களூரு : பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. இது, நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளது.இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநிலத்தின் சில இடங்களில், சாதாரண மழை பெய்கிறது. பல்வேறு மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது. நாளை வரை, பரவலாக மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன.நாளை வட மாவட்டங்களில், மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். மலைப்பகுதி, கடலோர … Read more

ஏர் இந்தியா நிர்வாகத்தில் திடீர் மாற்றம்.. யாருக்கு என்ன பதவி..!

இந்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியாவை மோடி அரசு தனியாருக்கு விற்பனை செய்த நிலையில், டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 100 சதவீத வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. மேலும் புதிய விமானங்களை வாங்கவும், சேவையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைக்கப்பட்ட சம்பளத்தில் சற்று அதிகரிப்பு..! டாடா குழுமம் டாடா குழுமம் ஏர் இந்தியாவின் சிஇஓ-வாகத் துருக்கியை சேர்ந்த இல்கர் … Read more

மும்பை: காலை உணவில் அளவுக்கு அதிகமான உப்பு… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது

மும்பை புறநகர் பகுதியான பயந்தர் பதக் ரோட்டில் வசித்து வருபவர் நிலேஷ்(46). இவரின் மனைவி நிர்மலா(40). நிர்மலா தனது கணவருக்கு காலை உணவாக காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்திருந்தார். அதனை நிர்மலா தனது கணவருக்கு பரிமாறிய போது அதனை சாப்பிட்டு பார்த்த நிலேஷ் கடும் கோபம் அடைந்தார். சாப்பாட்டில் அளவுக்கு அதிகமாக உப்பு போடப்பட்டு இருந்தது. இது குறித்து நிலேஷ் தனது மனைவியிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் வீட்டில் கிடந்த … Read more

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: மக்ரோனை எதிர்த்து வெற்றி பெறுவதாக மரீன் லு பென் உறுதி

பிரான்சில் இந்தத் தேர்தலில் தன்னால் வெற்றி பெற முடியும் என்று முக்கிய அப்பெண் வேட்பாளரான லு பென் உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்சின் உயர்மட்ட பதவியை ஏற்பதற்கான இரண்டாம் கட்டத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முக்கிய போட்டியாளரான மரீன் லு பென் (Marine Le Pen), இந்த தேர்தலில் தன்னால் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 15) தெற்கு பிரான்சில் உள்ள மக்ரோனுக்கு அதிக … Read more

சென்னையில் இருந்து ஹஜ் செல்ல அனுமதி கிடைக்கும்! ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தகவல்…

கும்பகோணம்: இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் அனுமதி கிடைக்கும் என கூறியுள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், ஹஜ் விஷயத்தில் யாரும் அரசியல் வேண்டாம் என்று கூறியதுடன், சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார். கும்பகோணத்தில் ரமலான் பெருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரம் ஏழை இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில் ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கலந்து … Read more

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரில் 26-வது போட்டி இன்று மதியம் 3.30 மனிக்கு மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தரவரிசைப் பட்டியலின் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் … Read more

4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்: பாலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பாலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ 20,228 வாக்குகள் வித்தியாசத்தில் பாலிகஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிரா கோலாப்பூர் வடக்கு பேரவை தொகுதியில் பாஜகவை 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.    

பழமையான கற்சுவர் பாரம்பரிய சின்னம் ஆகுமா?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா : பீஹாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 40 கி.மீ., நீளமுள்ள கற்சுவரை, ‘யுனெஸ்கோ’வின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பீஹாரின் நாலந்தா மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த ராஜ்கிர் நகரை பாது காக்கும் வகையில், 40 கி.மீ., நீளமுள்ள மிக பழமையான கற்சுவர் உள்ளது.இந்த கற்சுவரை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ள … Read more

மதுபோதையில் குருத்வாராவில் நுழைந்தாரா பஞ்சாப் முதல்வர்?! – பகவந்த் மான் மீது பாஜக புகார்

ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் குடிபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது. பைசாகி என்பது பஞ்சாப் மற்றும் சீக்கிய மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அது கடந்த ஏபரல் 14-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த கமிட்டி வலியுறுத்தியுள்ளது. Filed Police complaint against Punjab CM @BhagwantMann for Entering Gurudwara Damdama … Read more

கனேடிய பெண்ணுக்கு லொட்டரியில் கிடைத்த பெரும் தொகை: அவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் தெரியுமா?

கனடாவில் லொட்டரியில் தனக்குக் கிடைத்த பணத்தை தனது மகள்களுடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் பெண் ஒருவர். கனடாவில், North Bay என்ற இடத்தைச் சேர்ந்தவர் Sherry Forsman (67). அவருக்கு நான்கு மகள்களும், ஆறு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். Sherryக்கு லொட்டரியில் 100,0000 டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. பரிசு கிடைத்ததும், உடனடியாக சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள Sherry, தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையை தனது மகள்களுடன் பகிர்ந்துகொள்வதென முடிவு செய்துள்ளார். Source link