பாகிஸ்தானை துரத்தும் 60 பில்லியன் டாலர் பிரச்சனை.. சமாளிப்பாரா ஷெபாஸ் ஷெரீப்..!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தற்போது திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நிலையில், கடைசி வாய்ப்பாக ஐஎம்எப் அமைப்பிடம் கடன் வாங்குவதற்காகப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இலங்கையைக் காப்பாற்றுவது மிகவும் கடனமாகும். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபரான ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றிய சில நாளிலேயே 30 பில்லியன் டாலர் அளவிலான கடன் சுமைக்கு வழிவகுத்துள்ளார். டிவிட்டர்-ஐ எலான் மஸ் கைப்பற்ற ஈகோ-வும் ஒரு காரணமா..? சோகத்தில் ஸ்வீனி..! கச்சா … Read more

“அரசுக்கு எதிராகப் போராட்டம்… அரசியல் பயணம்" – சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக-வின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்லும் நேரத்தில் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்துச் சென்றார். அடுத்ததாகக் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவிகள் நீக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டுவரப்பட்டது. சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் பதவியை … Read more

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை அமைப்பை வாங்கும் இந்தியா!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எஸ்-400 ஓவர்ஹால் செய்யப்பட்ட என்ஜின்கள், உதிரிபாகங்களை வாங்குவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், S-400 Triumf வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் (air defence missile system) பயிற்சிப் படைப்பிரிவுக்கான சிமுலேட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெற்றுள்ளது. இது ரஷ்யாவிடமிருந்து பெறப்படும் இரண்டாவது படைப்பிரிவுக்கான ஏவுகணை அமைப்பாகும். இது ஒரு பயிற்சிப் படைப்பிரிவு என்றும் இதில் சிமுலேட்டர்கள் மற்றும் பிற பயிற்சி தொடர்பான உபகரணங்களை … Read more

மூன்றாம் உலகப்போர் துவங்கிவிட்டது! ரஷிய அரசு ஆதரவு செய்தி ஊடகம் தகவல்…

மாஸ்கோ: மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டது’ என ரஷ்ய போர்க்கப்பல் மொஸ்க்வா உக்ரைன் வீரர்களால் கருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து,   ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது. ரஷ்ய மாளிகையான  கிரெம்ளினின் முக்கிய பிரச்சார ஊதுகுழலான ரஷ்யா 1ன், இது தொடர்பான வீடியோவும்  வைரலாகியுள்ளது, இது இராணுவ மோதல் “மூன்றாம் உலகப் போர் என்று பாதுகாப்பாக அழைக்கப்படலாம்” என்று அதன்  தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபேயேவா கூறியுள்ளார். ரஷியா உக்ரைன் போர் 50 நாட்களை கடந்து  நடைபெற்று வருகிறது. இந்த போரில் … Read more

ஐபிஎல் கடைசி போட்டியின்போது நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டம்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆரம்ப நிகழ்ச்சியும், நிறைவு விழாவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் இந்த ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த ஆண்டின் கடைசி … Read more

'துன்பங்கள், துயரங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ ஈஸ்டர் திருநாள் வழிகாட்டும்': ஈஸ்டர் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். விடியலும், நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை ஈஸ்டர் வழங்குகிறது என வைகோ வாழ்த்து தெரிவித்தார். துன்பங்கள், துயரங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ ஈஸ்டர் திருநாள் வழிகாட்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

கடற்கரை திருவிழா கலை நிகழ்ச்சிகள்| Dinamalar

புதுச்சேரி : காந்தி சிலை அருகே கடற்கரை திருவிழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், கடற்கரை திருவிழா கடந்த 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று காந்தி சிலை அருகே மூங்கில் இசைக்கருவி, நாட்டுபுற இசை நடன நிகழ்ச்சி, வான வேடிக்கை, தப்பாட்டம், பாண்டி மெரினாவில் கைப்பந்து போட்டி, சிலம்பம், உறியடி உள்ளிட்ட … Read more

ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? விளக்கும் Environmentalist

கோயம்புத்தூர் – பாலக்காடு ரயில் தடத்தில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் போத்தனூரில் இருந்து வாளையாறு வரை ரயில் இன்ஜினில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் யானைகளின் உயிரைக்காப்பதன் அவசியத்தை உணர்ந்து வெளிநாட்டில் இருந்து யானை நிபுணர்களை அழைத்து வந்து இதற்கான ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். யானை ( மாதிரி படம் ) 19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயில் மோதி … Read more

100 கோடி பட்ஜெட்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த 19 வயது இளைஞர்!

 KGF CHAPTER 2 படத்தின் படத்தொகுப்பாளராக சிறப்பாக பணியாற்றிய 19 வயது இளைஞர் உஜ்வால் குல்கர்னிக்கு இந்தியா முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான KGF CHAPTER 1 என்ற கன்னட திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்று கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க செய்தது. அதனைத் தொடர்ந்து, அந்த படத்தின் இரண்டாம் பாகமான KGF CHAPTER 2 கடந்த 14ஆம் திகதி உலக முழுவதும் … Read more

சோனியா, ராகுல் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது தலைநகரில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி மற்றும் அஜய் மாக்கன் உள்பட மூத்த … Read more