சொத்து வரி உயர்வை கண்டித்து சென்னையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழக பா.ஜனதா சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் மாநில துணை தலைவர்கள் வி.பி. துரைசாமி, சக்கரவர்த்தி, முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன், … Read more

தமிழகத்தில் காலிமனைக்கான வரி 100% உயர்வு

சென்னை: சொத்துவரியை தொடர்ந்து காலிமனைக்கான வரியும் 100% உயர்த்தப்பட்டுள்ளது.  சொத்துவரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும் என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீகரெட் சிங்காரம்| Dinamalar

ரம்ஜானுக்கு அப்புறம்!மாநில கட்சில இருந்து தேசிய கட்சிக்கு தாவி மந்திரி பதவியை அலங்கரித்தவர். இவரோட சொகுசு பங்களா போட்டோ எல்லாம் சோஷியல் மீடியாவுல பரவி, பலபேரு வயித்தெரிச்சல கிளப்பி இருந்திச்சி.இவருக்கும், இப்போ இருக்கற கட்சிக்கும், சமீப காலமாக இணக்கமான சூழல் இல்லையோன்னு தோணுது. தங்கள் சமுதாயத்துக்கு எதிரான ஹிஜாப் முதல் வியாபார தடை என பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது.இதுக்கு தேசிய கட்சியில இருந்து தலைவர்கள் யாரும் தங்களுக்கு பகிரங்கமாக குரல் கொடுக்கல, தன்னையும் பேச விடலன்னு வருத்தத்துல … Read more

ஆர்பிஐ நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. சென்செக்ஸ் 412 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு..!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று காலை ஏற்றத்தில் தொடங்கி, பின்னர் சரிவினைக் கண்டு, முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இது இன்னும் சிறிது காலத்திற்கு வட்டி விகிதம் பெரியளவில் அதிகரிக்காது என்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! இதற்கிடையில் இந்திய பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் பற்றிய … Read more

உ.பி: மசூதிக்கு அருகே முஸ்லிம் பெண்களுக்குப் பாலியல் மிரட்டல்… சாமியார் மீது வழக்கு பதிவு!

உத்தரப்பிரதேச மாநிலம் , சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கைராபாத் என்ற இடத்தில், மசூதிக்கு வெளியே, அங்கிருந்த பொது மக்களிடையே பஜ்ரங் முனி தாஸ் என்ற சாமியார் ஒருவர் ஜீப்பில் பேசியபடி வந்தார். அப்போது பேசிய அவர், “ஒரு இந்து பெண்ணை கிண்டல் செய்தால், முஸ்லிம் பெண்களைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வேன்” என்று மிரட்டியதாகக் கூறப்பட்டது. இவரின் பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. … Read more

கைப்பற்றப்படாத 7,000 சடலங்கள்… ரஷ்ய தாய்மார்களுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்

உக்ரைன் பிணவறைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் ரஷ்ய இராணுவ வீரர்களின் 7,000 சடலங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருவதாக முக்கிய அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், ரஷ்ய துருப்புகளின் மொத்த இழப்பு 19,000 என உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான Oleksiy Arestovych தெரிவிக்கையில், போரின் ஆரம்பத்தில் 3,000 ரஷ்ய வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்க முயன்றதாகவும், ஆனால் ரஷ்யா மறுப்பு தெரிவித்து, உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக நம்பவில்லை என்று கூறியதாக … Read more

தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’! கல்லூரி மாணவிகளுக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: திமுக ஆட்சியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ கூறி, கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கினார். தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. ஏராளமான பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. அதுபோல காவல்துறையினரின் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இது தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.   தமிழகத்தில்  திமுக பொறுப்பேற்றதில் இருந்து,  கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு … Read more

மன்னார்குடியில் புதிய வேளாண்மை கல்லூரி- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழக சட்டசபை யில் இன்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:- 15 மாவட்டங்களில் விவசாய கல்லூரிகள் இல்லாமல் உள்ளது. அதில் மன்னார்குடியும் ஒன்று. வேளாண்மை கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் தேவைப்படும். வருங்காலத்தில் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் அங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது உறுப்பினர் … Read more

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

திருச்சி: திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சியில் ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், உறையூர், மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், காஜாமலை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா இலாகா மாற்றப்படுமா?| Dinamalar

பெங்களூரு,-அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அரசு மற்றும் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் துறை மாற்றப்படும் என கூறப்படுகிறது.பெங்களூரின் கவுரிபாளையாவில் சந்துரு என்ற இளைஞர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.இது கட்சிக்கும், அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையே அஸ்திரமாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு குடைச்சல் கொடுக்கின்றன.முந்தைய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அரக ஞானேந்திராவுக்கு உள்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. … Read more