நாளை தாக்கல் செய்யப்படும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் நாளை (9-ந்தேதி) மன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான மன்ற கூட்டம் 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் தலைமையிலும், கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்கிறார். அவர் நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படித்து முடிப்பார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா … Read more

கச்சத்தீவை மீட்க சரியான தருணம்: ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக ஈடுபடுகிறது. தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம்,பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

ஏப்., 10 முதல் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஏப்.,10 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 10 ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட … Read more

பெரும் தவறு செய்துவிட்டேன்.. முன்னரே பணி நீக்கம் செய்திருக்கலாம்..பெட்டர்.காம் CEO ஷாக்..!

பெட்டர்.காம் நிறுவனம் பற்றி அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பணி நீக்கத்திற்காக ஒரு நிறுவனம் பிரபலமானது எனில் அது பெட்டர் காம் ஆகத் தான் இருக்க முடியும். இது பணி நீக்கம் என்பதை விட, இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்த விதம் பலரின் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த ஜும் காலில் நீங்கள் இருந்தால் துரதிஷ்டவசமானவர். ஏனெனில் இந்த நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையில் நீங்களும் ஒருவர். இந்த நிமிடத்தில் இருந்து நீங்கள் … Read more

மணமகன் அணிந்திருந்த பணமாலை… பணத்தை உருவிய நண்பன் – வைரல் வீடியோ!

சமூக வலைதளத்தில் சில சுவாரஸ்யமான வீடியோக்கள் வலம் வருவதுண்டு. அதுபோல சமீபத்தில் தேதி, நேரம் குறிப்பிடப்படாத ஒரு வீடியோ, அதில் மண அலங்காரத்தில் மணமகனுக்கு பணமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மணமகனின் நண்பன் ஒருவர் பணத்தை திருடும் காட்சி வைரலாக பரவி வருகிறது. View this post on Instagram A post shared by Meemlogy (@meemlogy) இந்த வீடியோவுக்கு நகைச்சுவையான பல கமெண்டுகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவுக்கு  “Indian Money Heist” என்றும், “இது … Read more

உக்ரைன் படையெடுப்பில் பெரும் இழப்பை ஒப்புக்கொண்ட ரஷ்யா!

உக்ரைனில் 44-வது நாளாக தாக்குதலை தொடர்ந்துவரும் ரஷ்யா, இராணுவ படையின் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்துள்ளதாக ஒப்புகொண்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஸ்கை நியூஸிடம் பேட்டியளித்தபோது, இந்த உயிரிழப்புகள் “எங்களுக்கு ஒரு பெரிய சோகம்” என்று அவர் கூறியுள்ளார். ஆனால், வரவிருக்கும் நாட்களில் மாஸ்கோ அதன் போர் இலக்குகளை அடையும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். மேலும், உக்ரைன் “ரஷ்யாவுக்கு எதிரானது” மற்றும் “உக்ரைனில் நடந்த அனைத்தும் ரஷ்ய நாட்டிற்கு … Read more

ஹஜ் பயணிகள் புறப்பாடு தலமாக சென்னையை அறிவிக்கக் கோரிய வழக்கு! ஹஜ் கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, அகில இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 விமானங்கள் புறப்பாடு தலங்களாக இருந்து வந்தது. பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் அவை 10ஆக குறைக்கப்பட்டது. இதில் சென்னையும் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் … Read more

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்

புதுடெல்லி: சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன் வழங்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் தனது பள்ளி, ஆசிரமத்திற்கு செல்லக்கூடாது என்றும், சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார். இதையும் படியுங்கள்…செல்வாக்கில் … Read more

ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 4.5 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,109 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,33,067 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,213 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,00,002 ஆனது. தற்போது 11,492 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக … Read more