உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் நலனை தமிழக அரசு காக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது எம்.எல்.ஏ.க்கள் எழிலன் (தி.மு.க.), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- … Read more

ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பது ஒன்றிய அரசின் தந்திரம்: வெங்கடேசன் எம்.பி.

மதுரை: அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே என வெங்கடேசன் எம்.பி. ட்விட் செய்துள்ளார். ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம் என குறிப்பிட்டார். மேலும் தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை| Dinamalar

புதுடில்லி: புதுடில்லி: ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கிறது. அதேபோல், ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 11வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. இதனால், வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கிடைக்கும் பலன்கள் சர்வதேச அளவில் ஏற்பட்ட பதற்றத்தால் பாதிக்கப்படுகிறது. புதிய மற்றும் … Read more

ஆர்பிஐ-யின் சூப்பர் அறிவிப்பு.. இனி ஏடிஎம் கார்டே தேவையிருக்காது.. ஈஸியா பணம் எடுக்கலாம்..!

இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ஏடிஎம் மெஷினில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே, பணம் எடும் வசதி விரைவில் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்த ரெப்போ விகிதம் பற்றிய அறிவிப்பானது, எதிர்பார்ப்பினை போலவே மாற்றம் செய்யப்படவில்லை. இது வழக்கம்போல 4 சதவீதமாகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சரிந்து வரும் … Read more

'ஒவ்வொரு நாளும் ஜோ பைடனுக்கு உதவுகிறார்' இந்தியரைப் புகழ்ந்த அமெரிக்கா; யாரிந்த வேதாந்த் படேல்?

இந்தியர்கள் உலகமுழுவதும் உள்ள நாடுகளில் முக்கிய பதவிகளில் கோலோச்சி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவின் தலைமையகமாக இருக்கும் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்கள் முக்கிய பணிகளில் பணியாற்றி வருகின்றனர். 2009 முதல் 2010 வரை ஒபாமா ஆட்சில் இருந்தபோது ப்ரியா சிங் என்பவர் வெள்ளை மாளிகை பத்திரிகையில் உதவியாளராக (White House Press Assistant) இருந்தார். அதன் பின் 2017 முதல் 2019 வரை டிரம்ப் ஆட்சில் ராஜ் ஷா என்பவர் … Read more

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்: பொலிசார் கண்ட காட்சி

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து ஒரு பெண் அலறியதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் பொலிசாரை அழைத்துள்ளார். பொலிசார் வந்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, அந்த வீட்டின் குளியலறையில் தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் விரல் சிக்கிக்கொள்ள, அந்தப் பெண் உதவி கோரி சத்தமிட்டது தெரியவந்தது. பொலிசார் சோப் உதவியுடன் அவரது விரலை வெளியே எடுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே, அவர்கள் தீயணைப்புத் துறையினரை அழைத்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் தக்க உபகரணங்களுடன் வந்து இரண்டு மணி … Read more

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடல்! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…

சென்னை: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ள தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த திட்டங்களான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் … Read more

தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு 62 சிறப்பு ரெயில்

சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து 62 சிறப்பு ரெயில்கள் வாரம் தோறும் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கும் எண். 06005/06006 ஆகிய சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சிறப்பு கட்டணத்தில் அதிவேக ரெயிலாக 10 சர்வீஸ் இயக்கப்படும். ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய … Read more

அதிமுக விவகாரத்தில் சசிகலா மனுவை நிராகரிக்க கோரிய ஓபிஎஸ் – ஈபிஎஸ் வழக்கில் 11ம் தேதி தீர்ப்பு

சென்னை: அதிமுக விவகாரத்தில் சசிகலா மனுவை நிராகரிக்க கோரிய ஓபிஎஸ் – ஈபிஎஸ் வழக்கில் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதி விடுமுறை என்பதால் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை 11ம் தேதி அளிக்கிறது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நிபுணர் நாளை புதுச்சேரி வருகை| Dinamalar

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை 9ம் தேதி வருகிறார். காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 … Read more