இது எங்கள் நாடு… கொந்தளித்த மக்கள்: வெளிநாட்டில் அவமானப்பட்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம்

கரீபியன் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி, உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பால் படணத்தை பாதியில் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெலிஸில் அமைந்துள்ள இந்தியன் க்ரீக் கிராமத்திற்கு ஹெலிகொப்டரில் சென்ற இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிக்கே உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், பிரித்தானிய அரச குடும்பமானது காலனித்துவத்தின் நினைவுச்சின்னம் எனவும் கொந்தளித்துள்ளனர். பஹாமாஸ் மற்றும் ஜமைக்காவில் பெலிஸ் பகுதியில் உள்ள கொக்கோ பண்ணையை … Read more

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கைவிட வேண்டாம்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. சீனா உள்பட சில வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து, மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்து உள்ளது. இந்தியாவில், கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,06,080-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 516352-ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதால் மக்களிடையே முகக்கவசம் அணிவது மட்டுமின்றி, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை … Read more

குளிர்பான பாட்டில் லேபிள்களில் இந்த விபரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்- அரசு உத்தரவு

சென்னை: தமிழக உணவு பாதுகாப்பு துறை  ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.   அதனடிப்படையில்,  உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை … Read more

சென்னையில் ஏ.பி.வி.பி. அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா கைது..!!

சென்னை: ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் சுப்பையா கைது செய்யப்பட்டார். அடுக்குமாடு குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டி வீடு வாசலில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.   

திருப்பதி போகலாம்னு இருக்கீங்களா?! அடுத்த 3 மாதங்களுக்கான டிக்கெட் விவரங்கள் இதோ!

கொரோனா பரவல் குறைந்துவருவதன் காரணமாக திருமலை திருப்பதிக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சராசரியாக தினமும் அறுபத்தைந்தாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான முந்நூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்களை விநியோகிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதி இதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதிமுதல் முந்நூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் நாள் ஒன்றுக்கு முப்பதாயிரமும் (30,000) சர்வ … Read more

ரெய்னாவின் இந்த நிலைமைக்கு இதுவே காரணம்: இலங்கை வீரரின் புதிய விளக்கம்!

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் தற்போதைய ஃபார்ம் டி-20 போட்டிகளுக்கு பொருந்தாது என நம்புவதாக இலங்கையின் முன்னாள் கேப்டன் மற்றும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் கடந்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை அணியின் முன்னணி நட்சத்திர வீரர் மற்றும் ரசிகர்களால் Mr.IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா எந்த அணியாலும் எடுக்கப்படாமல் … Read more

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில் காலவரையறையின்றி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன இலங்கை தேயிலை, ஆடை, சுற்றுலா வருமானங்களை தான் பிரதானமாக நம்பியுள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் முடங்கியது. கடன் அதிகரித்தது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பள்ளிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இறுதித்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை பல லட்சம் மாணவ-மாணவிகள் … Read more

சென்னையில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று- தமிழகத்தில் புதிதாக 58 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 61 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 19 பேருக்கு கொரோனா … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட  சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. காவல்துறையின் மேல்விசாரணை நடைபெற்று வருவதால் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. மேல்விசாரணை நடத்தப்படும் நிலையில் சாட்சி விசாரணை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என அரசு தரப்பு தெரிவித்தது.