நடப்பு சாம்பியனை வீழ்த்தினார்… ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறிய லக்சயா சென்

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் (வயது 20), தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துவருகிறார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், நடப்பு சாம்பியனான லீக் ஜி ஜியாவுடன் (மலேசியா) மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை லக்சயா சென் 21-13 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் பதிலடி … Read more

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: சிறுதானிய சாகுபடி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்த, கட்டமைப்புகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் – ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவக் கோயிலாகக் கருதப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் – ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரங்கமன்னார் … Read more

உக்ரைன் மீது புடின் படையெடுத்தது ஏன்? பின்னணியை வெட்ட வெளிச்சமாக்கிய போரிஸ்

 சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் அவரது ஆட்சி பாணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தான், அந்நாட்டின் மீது படையெடுக்க புடின் முடிவெடுத்தார் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். Blackpool-ல் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பேசிய ஜான்சன் இவ்வாறு தெரிவித்தார். உக்ரைன் மீதான படையெடுப்பதன் மூலம் புடின் ஒரு பேரழிவுகரமான தவறை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. உக்ரைன் நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேரப் போகிறது என்பதை புடின் நம்பவில்லை. அவரது திட்டம் படி படையெடுப்பு தொடர்ந்தால், … Read more

பெற்றோரை பாதுகாக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை! மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

மும்பை: பெற்றோரை பாதுக்காக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை என  மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே பல நீதிமன்றங்கள் வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், தற்போது மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மும்பையில், மனச்சோர்வால் கணவன் படுக்கையில் உள்ள நிலையில், அவரை சட்டப்படியான காப்பாளராக அறிவிக்கக் கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், தாங்கங் மும்பையில் அடுக்குமாடிக் … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சாட்சி விசாரணைக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை:  கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறி, சயான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, நீலகிரி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும் … Read more

'தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம்': காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்பு..!!

சென்னை: தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டிருக்கிறார். வேளாண்மைக்கென மொத்தம் ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கே.எஸ். அழகிரி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

பழநி: பங்குனி உத்திர தேரோட்டம்; 5 ஆண்டுக்கு ஒருமுறை வரும் வத்தலகுண்டு பக்தர்கள்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி. இங்கு நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா, மூன்றாம் படைவீடானமான திருஆவினன்குடிக் கோயிலில் மார்ச் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளத் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. மாலையில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடி உள்ளிட்ட நேர்த்தி கடன்களைச் செலுத்தினர். பழநி பக்தர்கள் பங்குனி … Read more

போர் முடிவுக்கு வராததற்கு யார் காரணம்! போட்டுடைத்த ரஷ்யா

  உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வராததற்கு அமெரிக்கா தான் காரணம் என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கவிடாமல் உக்ரைனை அமெரிக்கா தான் தடுக்கிறது என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடும் உக்ரேனிய பிரதிநிதிகள் அமெரிக்கர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறிது. எங்களுடைய குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட ஏற்க  அவர்கள் அனுமதிக்கவில்லை என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் … Read more

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை வேறுபாடுகள் நீக்கம்! தமிழக அரசு

சென்னை:  மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை உயர்வு மற்றும் வேறுபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் மீன்பிடிப்பிற்கான செலவினத்தை குறைத்திடும் நோக்கத்தில் மீனவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விசைப்படகிற்கு ஆண்டு ஒன்றுக்கு 18000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்குப் படகு … Read more