போர் முடிவுக்கு வராததற்கு யார் காரணம்! போட்டுடைத்த ரஷ்யா

  உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வராததற்கு அமெரிக்கா தான் காரணம் என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கவிடாமல் உக்ரைனை அமெரிக்கா தான் தடுக்கிறது என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடும் உக்ரேனிய பிரதிநிதிகள் அமெரிக்கர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறிது. எங்களுடைய குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட ஏற்க  அவர்கள் அனுமதிக்கவில்லை என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் … Read more

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை வேறுபாடுகள் நீக்கம்! தமிழக அரசு

சென்னை:  மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை உயர்வு மற்றும் வேறுபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் மீன்பிடிப்பிற்கான செலவினத்தை குறைத்திடும் நோக்கத்தில் மீனவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விசைப்படகிற்கு ஆண்டு ஒன்றுக்கு 18000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்குப் படகு … Read more

கறி சமைக்கமுடியாத காகித சுரைக்காய்- வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த டிடிவி தினகரன்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்பட்ட இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வேளாண் அமைச்சர் பெருமிதம் பொங்கக் கூறியிருக்கிறார். ஆனால், அவற்றில் எத்தனை அறிவிப்புகளால் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால், ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. நெல்லுக்கு ஆதார விலையைக் கூட்டியிருப்பதாகக் … Read more

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.  

ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன் இந்தியர்களுக்கு ஹோலி வாழ்த்து| Dinamalar

புதுடில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இந்திய வம்சாவளி மக்களுக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வசந்தகாலத்தை வரவேற்கும் விழாவான ஹோலி பண்டிகை, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் வெகு விமரிசையாக கொண்டாடினர்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இந்திய வம்சாவளியினருக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நேற்று வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த பண்டைய … Read more

சிறு தொழில்களை பாதுகாத்திட டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்தவெளி கட்டமைப்பு வேண்டும்; பியூஷ் கோயல்

புதுடெல்லி, டிஜிட்டல் வர்த்தகத்துக்கான திறந்தவெளி கட்டமைப்பு(நெட்வொர்க்) மூலம் மின்னணு வர்த்தகத்தை(இ-காமர்ஸ்) ஜனநாயகப்படுத்தலாம் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார். இதன்மூலம் சிறு, குறு தொழில்களுக்கு சம வாய்ப்பு அளித்து சிறு வணிகத்தை பாதுகாக்க இது உதவும். மேலும், சிறு தொழில்களை பாதுகாக்க இது வழி செய்யும் என்றார்.  பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் ஏற்பாடு  செய்திருந்த 5-ஆவது … Read more

இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் முகேஷ் அம்பானி.. விலை என்ன தெரியுமா..?!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும், மிகப்பெரிய தொழிலதிபராகவும் விளங்கும் முகேஷ் அம்பானிக்கு ஆடம்பர கார்கள் மீது எப்போதுமே விருப்பம் அதிகம், இதனாலேயே தனது 27 மாடி சொகுசு வீட்டில் பல அடுக்குகளுக்குக் கார் பார்க்கிங் மட்டுமே வைத்துள்ளார். அந்த அளவிற்கு அதிகமான கார்களை வைத்துள்ளனர். முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் அவரது மகன்களும் கார் மீது அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கும் காரணத்தால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக டெஸ்லா காரை நேரடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி … Read more

பாகிஸ்தான்: பிரதமர் பதவி விலக வேண்டும்… இம்ரான்கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் , நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தநிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்களும் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, வருகிற 28-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தநிலையில், இம்ரான்கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியினர் உட்பட பலரும் … Read more

உக்ரைன் தேசிய கொடியுடன் விண்ணில் தோன்றிய ரஷ்ய வீரர்கள்: பரபரப்பை கிளப்பிய புகைப்படம்

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையின் மத்தியில், சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக வந்துசேர்ந்துள்ள மூன்று ரஷ்ய விண்வெளி வீர்ர்கள், உக்ரைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீலநிற உடைகளை அணிந்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தானில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த தளபதி ஒலெக் ஆர்டெமியேவ், டெனிஸ் மத்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகியோர் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ், … Read more

காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான குளிர்பானங்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்தால், அதுகுறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை  வாட்ஸ்ஆப் எண் அறிவித்து உள்ளது. இதுகுறித்து உணவுபாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்று உள்ளது. மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், … Read more