இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் முகேஷ் அம்பானி.. விலை என்ன தெரியுமா..?!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும், மிகப்பெரிய தொழிலதிபராகவும் விளங்கும் முகேஷ் அம்பானிக்கு ஆடம்பர கார்கள் மீது எப்போதுமே விருப்பம் அதிகம், இதனாலேயே தனது 27 மாடி சொகுசு வீட்டில் பல அடுக்குகளுக்குக் கார் பார்க்கிங் மட்டுமே வைத்துள்ளார். அந்த அளவிற்கு அதிகமான கார்களை வைத்துள்ளனர். முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் அவரது மகன்களும் கார் மீது அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கும் காரணத்தால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக டெஸ்லா காரை நேரடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி … Read more

பாகிஸ்தான்: பிரதமர் பதவி விலக வேண்டும்… இம்ரான்கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் , நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தநிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்களும் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, வருகிற 28-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தநிலையில், இம்ரான்கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியினர் உட்பட பலரும் … Read more

உக்ரைன் தேசிய கொடியுடன் விண்ணில் தோன்றிய ரஷ்ய வீரர்கள்: பரபரப்பை கிளப்பிய புகைப்படம்

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையின் மத்தியில், சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக வந்துசேர்ந்துள்ள மூன்று ரஷ்ய விண்வெளி வீர்ர்கள், உக்ரைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீலநிற உடைகளை அணிந்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தானில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த தளபதி ஒலெக் ஆர்டெமியேவ், டெனிஸ் மத்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகியோர் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ், … Read more

காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான குளிர்பானங்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்தால், அதுகுறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை  வாட்ஸ்ஆப் எண் அறிவித்து உள்ளது. இதுகுறித்து உணவுபாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்று உள்ளது. மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், … Read more

தமிழகத்தில் இன்னும் 1.35 கோடி பேர் 2வது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை- மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் இன்று 25வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனை தமிழகத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-      தமிழகத்தில் தினசரி அடிப்படையில் இரண்டு லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் 1,34,35,505 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 51,82,974 பேர் இன்னும் முதல் டோஸ் பெறவில்லை. மாநிலத்தில் … Read more

ஆணைய பரிந்துரை மீதான நடவடிக்கையை தெரிந்து கொள்ளாமல் பொதுநல வழக்கை விசாரிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த ஸ்டாம்ப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை குறித்து வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய தகவல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆணையம் பரிந்துரை மட்டும் தந்துள்ளது; அதன் மீதான நடவடிக்கை பற்றி அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்தது. 

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியா வருகை

புதுடெல்லி , 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா வந்தார்.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்  இந்த  அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா  வந்தார் .இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது. டெல்லி வந்த கிஷிடோவை  மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்டோர் வரவேற்றனர்  ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக … Read more

"சோனியா காந்தியை யாரும் ராஜினாமா செய்ய சொல்லவில்லை!" – குலாம் நபி ஆசாத்

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பதவி விலகுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி உத்தரவிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாகச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜி-23 காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து … Read more

குடும்பத்தில் உள்ள அத்தனை ஆண்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி: வெளிச்சத்துக்கு வந்த சோகம்

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, சகோதரர், தாத்தா, மாமா ஆகியோரால் மைனர் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சோகத்துக்குரிய சம்பவம் நடந்துள்ளது. சிறுமி படிக்கும் பள்ளியில் ‘நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்’ (good touch & bad touch) அமர்வின் போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு மைனர் சிறுமியை அவளது டீனேஜ் சகோதரர் மற்றும் அவர்களது தந்தை தனித்தனி சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் சிறுமியின் தாத்தா மற்றும் … Read more