ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியா வருகை

புதுடெல்லி , 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா வந்தார்.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்  இந்த  அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா  வந்தார் .இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது. டெல்லி வந்த கிஷிடோவை  மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்டோர் வரவேற்றனர்  ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக … Read more

"சோனியா காந்தியை யாரும் ராஜினாமா செய்ய சொல்லவில்லை!" – குலாம் நபி ஆசாத்

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பதவி விலகுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி உத்தரவிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாகச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜி-23 காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து … Read more

குடும்பத்தில் உள்ள அத்தனை ஆண்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி: வெளிச்சத்துக்கு வந்த சோகம்

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, சகோதரர், தாத்தா, மாமா ஆகியோரால் மைனர் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சோகத்துக்குரிய சம்பவம் நடந்துள்ளது. சிறுமி படிக்கும் பள்ளியில் ‘நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்’ (good touch & bad touch) அமர்வின் போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு மைனர் சிறுமியை அவளது டீனேஜ் சகோதரர் மற்றும் அவர்களது தந்தை தனித்தனி சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் சிறுமியின் தாத்தா மற்றும் … Read more

கோடநாடு கொலை வழக்கில் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலாவுக்கு சொந்தமாக  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் … Read more

தமிழக நிதிநிலை அறிக்கை மக்களுக்கு ஏமாற்றமே- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் வாக்குறுதிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை … Read more

கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானம் குடித்து 3 வயது குழந்தை பலி

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே வீட்டின் முன் கிடந்த காலாவதியான குளிர்பானம் குடித்த 3 வயது குழந்தை பலியானது. மல்லாபுரம் கிராமத்தில் சத்யராஜ் என்பவரின் 3 வயது மகள் ரச்சனா லட்சுமி காலாவதியான குளிர்பானம் குடித்து பலியானார். 3 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தது.  

பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை| Dinamalar

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக டில்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். ஜப்பான் பிரதமர் பியூமியோ கஷிடா இரண்டு நாள் பயணமாக டில்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய பயணத்தின் போது, 14வது இந்தியா ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில், முதல்முறையாக கஷிடோ கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக இந்த மாநாடு கடந்த … Read more

ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்: போதையில் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு

போபால், ஹோலி பண்டிகையை வடமாநிலங்களில் நேற்றைய தினம் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். இருப்பினும் இந்த பண்டிகையின் போது, ஒரு சில இடங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களும் அரங்கேறியுள்ளன.  உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் ராஜஸ்தான் மாநிலம் பைகானீர் மாவட்டத்தில், இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 நபர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் … Read more

“வேளாண் பட்ஜெட் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர் இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், “இது வேளாண் பட்ஜெட் அல்ல. வேளாண் மானியக் கோரிக்கையின்போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்புதான். வேளாண் பட்ஜெட்டுக்கான தனி … Read more

உன் மாமனார் ரஜினி தான் காரணம்! பலர் முன்னிலையில் நடிகர் தனுஷிடம் இளையராஜா சொன்ன தகவல்

சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி தொடர்பில் நடிகர் தனுஷிடம் இளையராஜா பேசிய வார்த்தைகள் கவனத்தை ஈரத்தது. சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் , கங்கை அமரன் , பாடகர் மனோ , எஸ்.பி.பி. சரண் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேடையில் ‘ என்னுள்ளே… என்னுள்ளே… ‘ என்ற பாடலை … Read more