கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானம் குடித்து 3 வயது குழந்தை பலி

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே வீட்டின் முன் கிடந்த காலாவதியான குளிர்பானம் குடித்த 3 வயது குழந்தை பலியானது. மல்லாபுரம் கிராமத்தில் சத்யராஜ் என்பவரின் 3 வயது மகள் ரச்சனா லட்சுமி காலாவதியான குளிர்பானம் குடித்து பலியானார். 3 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தது.  

பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை| Dinamalar

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக டில்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். ஜப்பான் பிரதமர் பியூமியோ கஷிடா இரண்டு நாள் பயணமாக டில்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய பயணத்தின் போது, 14வது இந்தியா ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில், முதல்முறையாக கஷிடோ கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக இந்த மாநாடு கடந்த … Read more

ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்: போதையில் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு

போபால், ஹோலி பண்டிகையை வடமாநிலங்களில் நேற்றைய தினம் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். இருப்பினும் இந்த பண்டிகையின் போது, ஒரு சில இடங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களும் அரங்கேறியுள்ளன.  உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் ராஜஸ்தான் மாநிலம் பைகானீர் மாவட்டத்தில், இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 நபர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் … Read more

“வேளாண் பட்ஜெட் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர் இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், “இது வேளாண் பட்ஜெட் அல்ல. வேளாண் மானியக் கோரிக்கையின்போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்புதான். வேளாண் பட்ஜெட்டுக்கான தனி … Read more

உன் மாமனார் ரஜினி தான் காரணம்! பலர் முன்னிலையில் நடிகர் தனுஷிடம் இளையராஜா சொன்ன தகவல்

சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி தொடர்பில் நடிகர் தனுஷிடம் இளையராஜா பேசிய வார்த்தைகள் கவனத்தை ஈரத்தது. சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் , கங்கை அமரன் , பாடகர் மனோ , எஸ்.பி.பி. சரண் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேடையில் ‘ என்னுள்ளே… என்னுள்ளே… ‘ என்ற பாடலை … Read more

மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்! அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால், அதில் பல சிக்கல் எழுந்துள்ளதால், அது குறித்து ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறது. அதற்கான காலக்கெடு மார்ச் 30ந்தேதி வரை கொடுக்கப்பட்டு உள்ளதாக வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த … Read more

பகவந்த் மான் அமைச்சரவையில் முக்கிய எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு இல்லை

சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத்  தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இன்று அவரது அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சரவையில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஹர்பால் சீமா, குர்மீத் சிங் தவிர மற்ற 8 பேரும் முதல்முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்கள். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை தேர்தலில் தோற்கடித்த பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களில் லப் சிங் உகோகே, குர்மீத் சிங் … Read more

ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும்: எம்.பி.பாரிவேந்தர் பேச்சு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும் என எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்தார். தங்களின் செயல்கள் மூலம் மக்களை கவர வேண்டும் என ஐஜேகே சார்பில் வென்றவர்களிடம் பாரிவேந்தர் பேசினார். தற்போது வெற்றியடைந்தவர்கள் எங்களின் அடையாளம் என சென்னையில் நடந்த விழாவில் எம்.பி.பாரிவேந்தர் பேசினார்.

பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: காங்கிரஸ்

பெங்களூரு,  கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று கூறியிருந்தார்.  பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறுகையில், “  குஜராத்தில் தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை … Read more