பகவந்த் மான் அமைச்சரவையில் முக்கிய எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு இல்லை

சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத்  தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இன்று அவரது அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சரவையில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஹர்பால் சீமா, குர்மீத் சிங் தவிர மற்ற 8 பேரும் முதல்முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்கள். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை தேர்தலில் தோற்கடித்த பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களில் லப் சிங் உகோகே, குர்மீத் சிங் … Read more

ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும்: எம்.பி.பாரிவேந்தர் பேச்சு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும் என எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்தார். தங்களின் செயல்கள் மூலம் மக்களை கவர வேண்டும் என ஐஜேகே சார்பில் வென்றவர்களிடம் பாரிவேந்தர் பேசினார். தற்போது வெற்றியடைந்தவர்கள் எங்களின் அடையாளம் என சென்னையில் நடந்த விழாவில் எம்.பி.பாரிவேந்தர் பேசினார்.

பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: காங்கிரஸ்

பெங்களூரு,  கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று கூறியிருந்தார்.  பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறுகையில், “  குஜராத்தில் தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை … Read more

`நரிக்குறவர், குருவிக்காரர்… நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை!’ – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நரிக்குறவர், குருவிக்காரர், பலவேசம் கட்டுபவர், இன்னும் பிற அறியப்படாத, அறியப்படுத்தப்படாத எத்தனையோ பழங்குடி இனத்தவர்கள் இன்னும் கூட தங்களுக்கான அடையாளமாக சாதிச் சான்றிதழ் பெற போராடிவருவதைப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நாம் கண்டுவருகிறோம். இதன் காரணமாகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எத்தனையோ முதல் தலைமுறை மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தும், மேற்படிப்பைத் தொடரமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுமட்டுமல்லாமல், இடஒதுக்கீட்டின் மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய உரிமையைக் கூட இவர்கள் இழக்க நேரிடுகிறது. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இப்படியான சூழ்நிலையை … Read more

உலகை அச்சுறுத்தும் ரஷ்யாவின் exoskeleton உடை: அதிர்ச்சியில் உறைந்து போன உக்ரைன்!

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்று வரும் உக்ரைன் போரில் இந்த உடைகள் பயன்படுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், இந்த கவச உடையானது எதிராளிகளுக்கு மிகப்பெரிய … Read more

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

சென்னை: பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜீலை மாதம், 2020-ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அகில பாரத வித்தியார்த்தி பரிசத் எனப்படும் ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் … Read more

வேளாண் பட்ஜெட் கண்துடைப்பு- எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்கள் பெருநஷ்டத்துக்கு ஆளானார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கொடுக்கிறோம் என்றார்கள். இன்று விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்தவுடன் அதை கொள்முதல் செய்வதில்லை. அதை திறந்த வெளியில் விவசாயிகள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். மழையால் … Read more

சென்னை மாதவரம் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!: அலறியடித்து ஓட்டம் பிடித்த ஒட்டுநர்..!!

சென்னை: சென்னை மாதவரம் அருகே ஆந்திரா நோக்கி சென்ற பழுதான காரின் எஞ்ஜின் பகுதியை திறக்க முற்பட்ட போது திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டுநர் உட்பட காரில் இருந்த 4 பேரும் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சாதனை: அமித்ஷா| Dinamalar

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் கிடைத்த மகத்தான வெற்றியே, நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சிஆர்பிஎப் அமைப்பின் எழுச்சி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளனர். தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும், ஜனநாயக நாட்டின் … Read more