பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சாதனை: அமித்ஷா| Dinamalar

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் கிடைத்த மகத்தான வெற்றியே, நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சிஆர்பிஎப் அமைப்பின் எழுச்சி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளனர். தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும், ஜனநாயக நாட்டின் … Read more

மேற்கத்திய நாடுகளுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்தியா.. !

இந்தியாவின் சட்டப்பூர்வமான எரிபொருள் பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது என்று வெள்ளிக்கிழமை மத்திய அரசு மேற்கு நாடுகளைத் தாக்கி பேசியுள்ளது. கச்சா எண்ணெய் தேவையைச் சொந்த நாட்டின் உற்பத்தி வாயிலாகத் தீர்த்துக்கொள்ளும் நாடுகள் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி நாடுகள் கட்டுப்பாட்டுத்தப்பட்ட எண்ணெய் வர்த்தகம் குறித்துப் பிற நாடுகளுக்கு அறிவுரை கூறக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் … Read more

ஆன்லைனில் நடக்கும் PF ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்; கலந்து கொள்வது எப்படி?

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உள்ள குறைகளைத் தீர்க்க வரும் மார்ச் 21-ம் தேதி ஆன்லைன் மூலமாக குறைதீர்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பென்ஷன் PF வட்டியை குறைத்த அரசு; Voluntary Provident Fund -ஐ தொடரலாமா? | How Will It Impact Employees? தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் சந்திக்கும் குறைகளைத் தீர்ப்பதற்காக வருகிற மார்ச் 21-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள … Read more

உக்ரைன் ஆயுதங்களை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்!

ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் சண்டையிடுவதைத் தவிர்ப்பதற்காக தங்களைத் தாங்களே காலில் சுட்டுக்கொள்கிறார்கள் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக, ரஷ்ய வீரர்கள் உக்ரேனிய வெடிமருந்துகளைத் தேடுகின்றனர். அதன்முலம் காயம் ஏற்பட்டால், அவர்கள் சுயமாக காயப்படுத்திக் கொண்டதைப்போல் இல்லாமல் உள்ளூர் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெலாரஷ்ய ஊடகமான NEXTA, ரஷ்ய படையினரை இடைமறித்து அவர்களுடன் உரையாடியபோது, ரஷ்ய இராணுவ அதிகாரிகள் கூட சுயமாக தங்கள் காலில் சுட்டுக் கொண்டதாக ரஷ்ய சிப்பாய் ஒருவர் … Read more

50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ஒதுக்கீடு

சென்னை: 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாயும், 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், உழவர் சந்தைகளில் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க இந்தாண்டு கூடுதலாக 6 … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், “குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன்” சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் தெரிவித்திருந்ததை, இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மேலும், வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 ஆம் ஆண்டிலும், பாராளுமன்றக் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாடு வெளியேறும் பகுதிக்கு அருகிலேயே கிணறு இருந்ததால் விபரீதம் அரங்கேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காளையை பத்திரமாக மீட்டனர்.

இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது ஜப்பான்!| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை ஜப்பான் பிரதமர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ, அரசு முறை பயணமாக இன்று(மார்ச் 19) இந்தியா வர உள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை, அங்கு செல்லும் பியுமியோ கிஷிடோ அறிவிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர … Read more

இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஜப்பான்.. அடிதூள்..!

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பதவியேற்ற பின்பு முதல் முறையாக இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக இன்று வந்துள்ளார். இந்தியா – ஜப்பான் இடையே நீண்ட காலமாக வர்த்தகம் மற்றும் நடப்புறவு இருக்கும் நிலையில் ஃபுமியோ கிஷிடா சிறப்பாக்க மிகப் பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு? ஃபுமியோ கிஷிடா ஃபுமியோ கிஷிடா-வின் இந்திய சந்திப்பில் பிரதமர் மோடியை சந்திக்க … Read more

“உக்ரைன் எப்போதும் அமைதியை தான் விரும்புகிறது” – அதிபர் ஜெலன்ஸ்கி

பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா, உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்ததிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மக்களை ஒன்று திரட்டிவருகிறார். உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கின்றன. மேலும் அமெரிக்கா, ரஷ்யா அதிபர் புதினை ”போர்க்குற்றவாளி” என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. விளாடிமிர் புதின் … Read more