50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ஒதுக்கீடு

சென்னை: 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாயும், 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், உழவர் சந்தைகளில் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க இந்தாண்டு கூடுதலாக 6 … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், “குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன்” சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் தெரிவித்திருந்ததை, இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மேலும், வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 ஆம் ஆண்டிலும், பாராளுமன்றக் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாடு வெளியேறும் பகுதிக்கு அருகிலேயே கிணறு இருந்ததால் விபரீதம் அரங்கேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காளையை பத்திரமாக மீட்டனர்.

இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது ஜப்பான்!| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை ஜப்பான் பிரதமர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ, அரசு முறை பயணமாக இன்று(மார்ச் 19) இந்தியா வர உள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை, அங்கு செல்லும் பியுமியோ கிஷிடோ அறிவிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர … Read more

இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஜப்பான்.. அடிதூள்..!

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பதவியேற்ற பின்பு முதல் முறையாக இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக இன்று வந்துள்ளார். இந்தியா – ஜப்பான் இடையே நீண்ட காலமாக வர்த்தகம் மற்றும் நடப்புறவு இருக்கும் நிலையில் ஃபுமியோ கிஷிடா சிறப்பாக்க மிகப் பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு? ஃபுமியோ கிஷிடா ஃபுமியோ கிஷிடா-வின் இந்திய சந்திப்பில் பிரதமர் மோடியை சந்திக்க … Read more

“உக்ரைன் எப்போதும் அமைதியை தான் விரும்புகிறது” – அதிபர் ஜெலன்ஸ்கி

பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா, உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்ததிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மக்களை ஒன்று திரட்டிவருகிறார். உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கின்றன. மேலும் அமெரிக்கா, ரஷ்யா அதிபர் புதினை ”போர்க்குற்றவாளி” என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. விளாடிமிர் புதின் … Read more

ரஷ்ய மீண்டு வர பல தலைமுறைகள் தேவைப்படும்! புடினுக்கு ஜெலன்ஸ்கி பகிரங்க எச்சரிக்கை

உக்ரைன் மீதான படையெடுப்பினால் ஏற்படும் இழப்புகள், மீண்டு வர பல தலைமுறைகள் தேவைப்படும் அளவிற்கு இருக்கும் என ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா தாமதமின்றி மேலதிக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா தனது தவறுகளை சரி செய்வதற்கான ஒரே வழி இது தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது சந்திக்க வேண்டிய நேரம், பேச வேண்டிய நேரம், உக்ரைனுக்கான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் … Read more

மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை: மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதிக்கான விரைவில் நடைமுறைக்கு வரும்; எழும்பூர், செண்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதிக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனை பொருட்களை உற்பத்தி செய்ய ரூ.2.65 கோடி நிதி- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனை மரம் விதையிட்ட நாளை தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டு விட்டாலும் தானாக வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குறவர் இன சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நரிக்குறவர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.