மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை: மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதிக்கான விரைவில் நடைமுறைக்கு வரும்; எழும்பூர், செண்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதிக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனை பொருட்களை உற்பத்தி செய்ய ரூ.2.65 கோடி நிதி- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனை மரம் விதையிட்ட நாளை தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டு விட்டாலும் தானாக வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குறவர் இன சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நரிக்குறவர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் பொது நிகழ்ச்சியில் தலாய் லாமா| Dinamalar

தர்மசாலா:இரண்டு ஆண்டுகளுக்குப் பின், திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நேற்று தர்மசாலாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த 1959ல், நம் அண்டை நாடான சீனாவில், அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.அன்று முதல், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் அவர் வசித்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டு களாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது வெளியில் வராமல் இருந்த தலாய் லாமா, … Read more

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர்… உடலை மருத்துவ கல்விக்கு தானமாக வழங்குவதாக தெரிவித்த தந்தை

ரஷ்யா – உக்ரைன் போரில் கர்நாடக மாநிலம், ஹவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடா, தன் மகனின் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் கேட்டுக்கொண்டார். “ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப்பட்ட பிறகு, அவர் உடல் இந்தியா கொண்டுவரப்படும்” எனக் கர்நாடக முதல்வர் தெரிவித்திருக்கிறார். உக்ரைனில் பலியான இந்திய மாணவனின் தந்தை … Read more

மருமகள், மகன் என மொத்த குடும்பத்தையும் வீட்டோடு எரித்து கொன்ற முதியவர்! அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீட்டோடு எரித்து கொன்ற முதியவரின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சீனிகுழி என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. சொத்துத் தகராறில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சொன்ன தகவல் அதன்படி ஹமீத் (79) என்ற முதியவர் மொஹம்மது ஃபைசல் (49), அவரது மனைவி ஷீபா (39), மகள்கள் மீரு (16), அஸ்னா (13) … Read more

மதுரையில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்! காவல்துறை வழக்கு பதிவு…

மதுரை: மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல மதுரையில் தவ்ஹீத் தமாஅத் அமைப்பு போராட்டம் நடத்தியது.  அதில் பேசிய  கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை … Read more

மாவட்டங்கள்தோறும் சிறுதானிய விழா- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளீனிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும். … Read more

திராவிடர் கழக பொறுப்பேற்று 45-வது ஆண்டு தொடக்கம்: கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

சென்னை: சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழக பொறுப்பேற்று 45-வது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி கி.வீரமணிக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.  

திருமலை ஏழுமலையான் தரிசனம் விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு| Dinamalar

திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, ஏப்ரல் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம், ஏப்ரல் முதல் ஏழுமலையானுக்கு ஆர்ஜித சேவைகளை துவங்க உள்ளது.அதற்கான டிக்கெட்டுகள், நாளை முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாளும், மே மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 23ம் … Read more