மதுரையில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்! காவல்துறை வழக்கு பதிவு…

மதுரை: மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல மதுரையில் தவ்ஹீத் தமாஅத் அமைப்பு போராட்டம் நடத்தியது.  அதில் பேசிய  கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை … Read more

மாவட்டங்கள்தோறும் சிறுதானிய விழா- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளீனிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும். … Read more

திராவிடர் கழக பொறுப்பேற்று 45-வது ஆண்டு தொடக்கம்: கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

சென்னை: சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழக பொறுப்பேற்று 45-வது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி கி.வீரமணிக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.  

திருமலை ஏழுமலையான் தரிசனம் விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு| Dinamalar

திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, ஏப்ரல் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம், ஏப்ரல் முதல் ஏழுமலையானுக்கு ஆர்ஜித சேவைகளை துவங்க உள்ளது.அதற்கான டிக்கெட்டுகள், நாளை முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாளும், மே மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 23ம் … Read more

McDonald’s லோகோ-வை திருடிய ரஷ்ய நிறுவனம்.. அடபாவிகளா..!

உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து ரஷ்யாவை மொத்தமாக ஒதுக்கி வைத்துள்ள நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் ரஷ்ய நிறுவனங்கள் வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! ஆனால் உலகப் பல முன்னணி பிராண்டுகள் வெளியேறிய பின்பு இந்த இடத்தைப் பிடிப்பதும், மக்களுக்கு அதே பிராண்ட் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினம் என்பதால், முன்னணி பிராண்டு … Read more

`எளிதில் பணம் சம்பாதிக்க, படம் பார்த்து பைக்குகளை திருடினோம்’ – கோவையில் சிக்கிய இருவர்

பைக் திருட்டு எல்லா ஊர்களிலும் தடுக்க முடியாத விஷயமாகிவிட்டது. கோவை சுற்றுவட்டாரங்களில் பைக்குகளை திருடி, ஆன்லைன் மூலம் விற்கும் கும்பல் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. ராகுல் கிருஷ்ணா என்ற இளைஞர், கணபதி அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக் திருடுபோனது குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தார். கோவை UPS வெடித்து உயிரிழந்தனரா மூன்று பெண்கள்; கோவை விபத்தில் நடந்தது என்ன? அந்த பைக்கை விற்பது தொடர்பாக பரவிய ஓர் வாட்ஸப் மெசேஜ் … Read more

அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம்

அமேசான் காட்டில் தொலைந்துபோன பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் 25 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டனர். ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிரேசிலிய பழங்குடியின சிறுவர்கள் 25 நாட்கள் அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போயுள்ளனர், அங்கு அவர்கள் பழம் சாப்பிட்டு, மழைநீரைக் குடித்து உயிருடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 15 செவ்வாய்க்கிழமையன்று மீட்கப்பட்ட சகோதரர்களான 7 வயது Glauco மற்றும் 9 வயது Gleison, அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 35 கிலோமீட்டர் … Read more

பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பகவந்த் மான் அமைச்சரவை பதவியேற்பு விழா பஞ்சாப் ராஜ்பவனில் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு  ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நடைபெற்று முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது. 117 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதி களை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. … Read more

வேளாண் பட்ஜெட்- மின்மோட்டார் பம்பு செட்டுகளுக்கு ரூ.5 கோடி மானியம்

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- மண்ணில் உண்டியல் போல சேமித்த மழைநீரை குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்கு இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், … Read more

செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS ஒப்படைத்தார். மொபைல் தொலைந்து போனால் உடனடியாக IMEI எண்ணுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் எனவும் எஸ்.பி. அரவிந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.