`அபூர்வ ராகங்கள்' தெரியும், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த இந்தப் படங்கள் தெரியுமா? | Visual Story

ரஜினி – கமல், கே.பாலசந்தர் அரை நூற்றாண்டாக சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினி – கமல் இரு துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் நண்பர்களான இருவரும் சில படங்கள் இணைந்து நடித்துள்ளனர். அது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட். அபூர்வ ராகங்கள் (1975) அபூர்வ ராகங்கள் (1975) கே.பாலசந்தரின் படம். எப்போதாவது நிகழும் ‘அபூர்வ ராகம்’ போல காதல் என்பதே கதை. மரபு மீறிய உறவுகளைக் கையாண்ட விதம் சிறப்பாகப் பேசப்பட்டது. ரஜினி ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன கணவராகவும் கமல் … Read more

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி – இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்றும்  இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு செய்யப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்து காகிதமில்லா பட்ஜெட்டில்,  உழவுத் தொழிலே உன்னதம் என உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறியவர்,  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்துள்ளனர் நம் ஆதித் தமிழர்கள் / … Read more

ஹாங்காங்கில் வேகமெடுக்கும் தொற்று- தென் கொரியாவில் ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

சியோல்: தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நேற்று முன்தினம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். … Read more

கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும் எனவும், கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950 ஆகவும், கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின்  கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பாட புத்தகத்தில் நடிகர் புனித் வாழ்க்கை வரலாறு| Dinamalar

பெங்களூரு : ”மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் வாழ்க்கை வரலாற்றை, 4 அல்லது 5ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து, அரசிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என கர்நாடக தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார். கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்தாண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இவர், சிறு வயது முதலே பல திரைப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, 26 ஆதரவற்ற இல்லங்கள், 19 கோ சாலைகள், 16 முதியோர் … Read more

"விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!" – சிறப்புகள், எதிர்பார்ப்புகள் என்ன என்ன?

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியவை. தமிழகத்தில், ஆங்காங்கே நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் தேடல்களால் கண்டறியப்படும் பழமையான சின்னங்கள், பொருட்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் போன்றவை நம் முன்னோர்களின் பழங்கால வாழ்வியலை வெளிப்படுத்தி வருகின்றன. கலை, கல்வி, அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், வணிகம், நாகரீகம், விவசாயம் போன்றவற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் எடுத்துரைத்திட தவறுவதில்லை. அத்தகைய பழமையான பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே … Read more

இன்று வேளாண் பட்ஜெட்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் மரியாதை – வீடியோ

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக முழு நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று  வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் … Read more

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தலைமை கழகத்தில் இன்று மாலை நடக்கிறது

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை பொதுபட்ஜெட் மற்றும் வேளாண்பட்ஜெட் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதன்மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக பேச உள்ளனர். இதில் யார்-யார் பேச உள்ளனர் என்பது இனிமேல் தான் முடிவு செய்யப்படும். இதுபற்றி முடிவு செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை … Read more

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

ஆக்லன்ட்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 50 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலிராஜ் -68, யாஸ்திகா பாட்டியா -59 ரன் எடுத்தனர்.   

குஜராத்தைப் போல கர்நாடக பள்ளி பாட திட்டத்திலும் பகவத் கீதை!| Dinamalar

பெங்களூரு: ”குஜராத் போன்று, கர்நாடகாவிலும் பாடப்புத்தகத்தில் ‘பகவத் கீதை’ இடம் பெறுவது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என கர்நாடக தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார். பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது: குஜராத்தில் மூன்று முதல் நான்கு கட்டங்களாக ‘மாரல் சயின்ஸ்’ எனப்படும் அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதுதான் என் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வருடன் விவாதித்த பின்னரே, அறநெறி பாடத்தை … Read more