பிரதமர் மோடிக்கு பிறகு பா.ஜனதா பலம் இழந்துவிடும்: வீரப்பமொய்லி

பெங்களூரு : முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த சோனியா காந்தி விரும்புகிறார். அதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கிறார். பா.ஜனதா நிரந்தரமாக இதே பலத்துடன் இருக்காது. பிரதமர் மோடிக்கு பிறகு அந்த கட்சி பலத்தை இழந்துவிடும். காங்கிரஸ் ஆட்சி இல்லை என்பதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே கடைசி வரை உயிர்ப்புடன் இருக்கும். … Read more

தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் இன்று 25வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: 25வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை 9.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!

பிக்சட் டெபாசிட் என்றாலே மிக பாதுகாப்பான நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். அதிலும் சில சலுகைகள் கிடைக்கிறது எனில் இன்னும் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இது சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மைக்கு எதிராக ஒரு பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. முதிர்ச்சியின் போது பாதுகாப்பான வருமானத்தின் பலனை உங்களுக்கு வழங்குகிறது. வட்டி அதிகரிக்கலாம் இது குறுகிய காலத்திலும், நீண்டகாலத்திலும் பாதுகாப்பான வருமானம் கொடுக்கும் ஒரு திட்டம். குறிப்பாக தற்போது வட்டி விகிதம் அதிகரிக்க … Read more

பீகார்: முடிவுக்கு வந்த முதல்வர் – சபாநாயகர் மோதல்! – நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் சபாநாயகர் விஜய் குமார் சின்காவின் சொந்தத் தொகுதியான லக்கிசராயில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் சபாநாயகருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க-வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார். பீகார் சட்டசபையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க தொடங்கிய போது சபாநாயகர், அந்த … Read more

கனடாவில் அதிரடியாக தரையிறக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப் பெரிய விமானம்

மிகப் பெரிய ரஷ்ய விமானம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் வெளியேறவும் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்ய விமானங்களுக்கு கனடா அரசாங்கம் தடை விதித்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கடந்த பிப்ரவரி 27ம் திகதி ரொறன்ரோவில் அதிரடியாக தரையிறக்கப்பட்டது. ஏங்கரேஜ் மற்றும் ரஷ்யா வழியாக சீனாவில் இருந்து கனடா வந்த அந்த சரக்கு விமானமானது ரொறன்ரோவில் தரையிறங்கிய … Read more

மதுரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே திருவாதவூரில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அர்ச்சுனன் (20), ஸ்ரீகாந்த் (21)  என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு 26ல் துணை சேர்மன் தேர்தல்| Dinamalar

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகராட்சி துணைச் சேர்மன் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் கிரிஜா திருமாறன் போட்டியிட்டார். ஆனால் தி.மு.க., ஜெயந்தி ராதா கிருஷ்ணன் நகர செயலாளர் மணிவண்ணன் ஒத்துழைப்புடன் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அன்று 10 மணி நேரத்திற்கு மேலாக வி.சி., கட்சியினர் மறியல் செய்தனர். அமைச்சர் கணேசன் துணை … Read more

உக்ரைன் படையெடுப்பு… புடின் அடுத்ததாக எடுக்கக்கூடிய நான்கு பகீர் நகர்வுகள்

உக்ரைன் மீதான படையெடுப்பு சரிவடைந்தால், அடுத்ததாக கொடூரமான தாக்குதலுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிடலாம் என இராணுவ வட்டாரத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் முடிவை எட்டாதது விளாடிமிர் புடினுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் உக்ரைனில் இறப்பு என்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் தலைவர் Lt Gen Sir Jim Hockenhull அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் படையெடுப்பு இதுவரை சாதமான முடிவுக்கு … Read more

வரும் 25ந் தேதி உத்தர பிரதேச முதலமைச்சராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றியது.  இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேசத்தில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே கட்சி தொடர்ந்து இரண்டாது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.  இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சராக 2வது முறையாக வரும் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார்.  பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, … Read more