ஆசிரியர் பணியிடம் நிரப்ப கல்வி அமைச்சர் நாகேஷ் உறுதி| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,” என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணை வரும் 21ல் வெளியிடப்பட உள்ளது. வரும் 23 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம். பி.எட்., – … Read more

மூன்று சக்கர வாகனங்கள் வழங்க கூடுதல் நிதியுதவி| Dinamalar

பெங்களூரு : ”மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்,” என மகளிர், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தெரிவித்தார். சட்டசபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:அமைச்சர் ஹாலப்பா ஆச்சார்: ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3,033 மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் நிதியிலிருந்தும் மூன்று சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, அதிக தேவை உள்ளது. எனவே பல்வேறு வழிகளில், வருவாய் சேகரித்து … Read more

ஆடையை விலக்கி சோதனை: லண்டனில் பாடசாலை சிறுமிக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

லண்டனில் கருப்பின சிறுமி ஒருவர் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில், மாநகர பொலிசார் மீது அவர் வழக்குத் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி தமது பள்ளி மீதும் சிவில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவு செய்துள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்கொட்லாந்து யார்டு மன்னிப்பு கேட்டுள்ளது. இனவாதம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம் எனவும் ஸ்கொட்லாந்து யார்டு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இவ்வாறான ஒரு செயல் இனிமேலும் எவருக்கும் நடந்திராத … Read more

ஜோ பைடன் கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம்!

ரஷ்ய ஜனாதிபதி புதின்”கொலைகார சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து இருப்பது தனிப்பட்ட முறையில் அவமானபடுத்தும் செயல் என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று செயின்ட் பேட்ரிக் தின விழாவில் உரையாற்றிய அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு அத்துமீறி போர் புரியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை போர் குற்றவாளி என அறிவித்தார். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு செயலுக்கு ஜனாதிபதி புதின் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும், … Read more

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டினார் ரோஜர் ஃபெடரர்

சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவீஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக  போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.  இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு  5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.  ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்களைப் … Read more

செய்திகள் சில வரிகளில்… கர்நாடகா| Dinamalar

முதல்வர் சுற்றுப்பயணம் பெங்களூரு: முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று யாத்கிர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்கிறார். சஹபுரா தாலுகா தோரணகல் செல்லும் அவர், சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறார். அமைச்சர்கள் அசோக், கோவிந்த கார்ஜோள் உடன் செல்கின்றனர் .ஏப்., 1 முதல் பால் விலை உயரும்? பெங்களூரு: கர்நாடகா பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், நந்தினி பால் விலையை 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன் வீரர்களின் லேசர் குண்டுவீச்சு: மொத்தமாக நொறுங்கிய ரஷ்ய டாங்கிகள்

உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கும் ரஷ்ய துருப்புகளுக்கு கடுமையான பதிலடியை அளித்து வருகின்றது உக்ரைன் துருப்பு. உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு வெற்றி விழாவை ரஷ்யாவில் விளாடிமிர் புடின் முன்னெடுத்துள்ளார். தமது இராணுவத்தை பெருமையாக பேசிய அவர், தேவைப்பட்டால் தங்கள் உடலை கேடையமாக மாற்றி சக வீரர்களை காக்கும் சகோதர உள்ளம் கொண்டவர்கள் ரஷ்ய வீரர்கள் என புடின் பேசியுள்ளார். இந்த நிலையில், உக்ரைன் தலைநகரை கைப்பற்ற நெருங்கும் ரஷ்ய துருப்புகளின் டாங்கிகள் அணிவகுப்பை … Read more

வரும் 21 முதல் 23 ஆம் தேதி வரை திருப்பதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது 

திருப்பதி ஏப்ரல்,. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான திருப்பதி சிறப்பு தரிசன ரூ.300 டிக்கட்டுகள் ஆன்லைனில் வரும் 21 முதல் 23 வரை 3 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட்டுகள் ஆனலைன் மூலம் ஒரு மாதத்துக்கான டிக்கட்டுகள் குறிப்பிட்ட தினங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.   தவிர இலவச தரிசனத்துக்கான டிக்கட்டுகள் தினசரி 30000 வீதம் திருப்பதியில் நேரடியாக வழங்கப்படுகிறது. வரும் 21 முதல் 23 ஆம் தேதி வரையிலான மூன்று … Read more

பாலிவுட் இயக்குனருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு| Dinamalar

புதுடில்லி:உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த 1990ல், ஜம்மு – காஷ்மீரில் இருந்து, பயங்கரவாதத்தால் காஷ்மீரி பண்டிட்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், தி காஷ்மீர் பைல்ஸ் ஹிந்தி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதில், அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்துஉள்ளனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் விவேக் … Read more