செய்திகள் சில வரிகளில்… கர்நாடகா| Dinamalar

முதல்வர் சுற்றுப்பயணம் பெங்களூரு: முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று யாத்கிர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்கிறார். சஹபுரா தாலுகா தோரணகல் செல்லும் அவர், சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறார். அமைச்சர்கள் அசோக், கோவிந்த கார்ஜோள் உடன் செல்கின்றனர் .ஏப்., 1 முதல் பால் விலை உயரும்? பெங்களூரு: கர்நாடகா பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், நந்தினி பால் விலையை 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன் வீரர்களின் லேசர் குண்டுவீச்சு: மொத்தமாக நொறுங்கிய ரஷ்ய டாங்கிகள்

உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கும் ரஷ்ய துருப்புகளுக்கு கடுமையான பதிலடியை அளித்து வருகின்றது உக்ரைன் துருப்பு. உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு வெற்றி விழாவை ரஷ்யாவில் விளாடிமிர் புடின் முன்னெடுத்துள்ளார். தமது இராணுவத்தை பெருமையாக பேசிய அவர், தேவைப்பட்டால் தங்கள் உடலை கேடையமாக மாற்றி சக வீரர்களை காக்கும் சகோதர உள்ளம் கொண்டவர்கள் ரஷ்ய வீரர்கள் என புடின் பேசியுள்ளார். இந்த நிலையில், உக்ரைன் தலைநகரை கைப்பற்ற நெருங்கும் ரஷ்ய துருப்புகளின் டாங்கிகள் அணிவகுப்பை … Read more

வரும் 21 முதல் 23 ஆம் தேதி வரை திருப்பதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது 

திருப்பதி ஏப்ரல்,. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான திருப்பதி சிறப்பு தரிசன ரூ.300 டிக்கட்டுகள் ஆன்லைனில் வரும் 21 முதல் 23 வரை 3 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட்டுகள் ஆனலைன் மூலம் ஒரு மாதத்துக்கான டிக்கட்டுகள் குறிப்பிட்ட தினங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.   தவிர இலவச தரிசனத்துக்கான டிக்கட்டுகள் தினசரி 30000 வீதம் திருப்பதியில் நேரடியாக வழங்கப்படுகிறது. வரும் 21 முதல் 23 ஆம் தேதி வரையிலான மூன்று … Read more

பாலிவுட் இயக்குனருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு| Dinamalar

புதுடில்லி:உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த 1990ல், ஜம்மு – காஷ்மீரில் இருந்து, பயங்கரவாதத்தால் காஷ்மீரி பண்டிட்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், தி காஷ்மீர் பைல்ஸ் ஹிந்தி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதில், அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்துஉள்ளனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் விவேக் … Read more

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் பாவனா; வாழ்த்தும் திரையுலகம்!

மலையாளம், தமிழ், கன்னடம் என பலமொழி சினிமாக்களில் பிஸியாக நடித்துவந்தவர் கேரள நடிகை பாவனா. பாவனா கடைசியாக 2017-ல் வெளியான ஆதம் ஜாண் சினிமாவில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். மீடியாக்களிடமும் வெளிப்படையாக பேசாமல் இருந்தார். இந்த நிலையில், உலக மகளிர் தினத்தில் `வி த வுமன் ஆஃப் ஆசியா’ கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனம் திறந்தார் பாவனா. சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்ட … Read more

நீடிக்கும் ரஷ்ய படையெடுப்பு: போர் வெற்றிவிழாவை கொண்டாடிய புடின்

உக்ரைன் மீதான படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் வெற்றி விழாவை பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் புடின் கொண்டாடியுள்ளார். தலைநகர் மாஸ்கோவின் லுஷ்னிகி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் போர் குறித்து பெருமையாகவும் புடின் பேசியுள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்குப் பகுதியான கிரிமியாவைக் கைப்பற்றியதன் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புடின் இந்த விழாவை முன்னெடுத்துள்ளார். சுமார் 200,000 க்கும் அதிகமான மக்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர் எனவும், ஆனால் எண்ணிக்கையை சரிபார்க்க … Read more

மதுரை உயர்நீதிமன்றம் : பட்டாசு ஆலை விபத்து குறித்த பரபரப்பு தீர்ப்பு

மதுரை மதுரை உயர்நீதிமன்ற கிளை பட்டாசு ஆலை விபத்துகளில் தொடர்புடையோருக்குக் கருணை காட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளது. சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் அதிக அளவில் உள்ளது.  இங்கு அடிக்கடி வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கும் நிலை ஏற்படுகிறது.    இதில் பல நிகழ்வுகளில்  சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவரப் பின்பற்றாததே காரணமாக உள்ளது. சமீபத்தில் நடந்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.  உரிமையாளர் மற்றும் … Read more

பவுத்த கையெழுத்து பிரதிகள் மொழிபெயர்க்கும் பணி தீவிரம்| Dinamalar

பாட்னா:பவுத்தம் குறித்து, கடந்த 7 முதல் 13ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், கையெழுத்து பிரதிகளில் எழுதப்பட்ட உள்ளடக்கத்தை மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடந்து வருவதாக, பீஹார் அரசு தெரிவித்துள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சிநடக்கிறது.இந்த மாநிலத்தின் கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அலோக் ரஞ்சன், சட்டசபையில் நேற்று முன்தினம் கூறியதாவது:பீஹாரின் நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தில், 7 முதல் 13ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், … Read more

இன்றைய ராசி பலன் | 19/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

காற்று மாசாவதைத் தடுக்க சென்னை சுடுகாடுகளில் எரிவாயு தகன மேடை

சென்னை காற்று மாசுபடுவதைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்துச் சுடுகாடுகளிலும் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள பல சுடுகாடுகளில் இறந்தவர்களின் சடலம் விறகுகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது.  இதற்கு சுமாராக 500 கிலோ விறகுகள் தேவைப்படுகிறது.   மேலும் இவ்வாறு விறகுகள் மூலம் தகனம் செய்யும்போது நாடெங்கும் சுமார் 80 லட்சம் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியாகி காற்றில் கடும் மாசு உண்டாகிறது. மேலும் விறகுகள் மூலம் தகனம் செய்யும் … Read more