மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் – ஆடியோ

மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளன. அதன்படி, மார்ச் 28 மற்றும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. அதுபோல, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும், ஆத்ஆத்மி கட்சி பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறது என்றும், கார்டூன் விமர்சித்துள்ளது.  https://patrikai.com/wp-content/uploads/2022/03/Pari-Audio-2022-03-18-at-11.04.01-AM.ogg

2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்…

சென்னை : 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்… * மாநிலங்களின் உரிமைகளுக்காக தி.மு.க. அரசு தொடர்ந்து போராடும். * உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. * உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 10,01,083 மனுக்களுக்கு தீர்வு. * கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் … Read more

கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு: கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை பணிக்கு வர உத்தரவிடப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க தவறாது பணிக்கு வரவேண்டும் எனவும், நாளை அனைவரும் பணிக்கு வரவேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டார்.   

பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்| Dinamalar

புது டில்லி: ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் 2021ம் ஆண்டிலும் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி அறிக்கை 2011ம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகிறது. தற்போது அதன் 10வது ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது 2021க்கான அறிக்கை. இருப்பினும் 2019 முதல் 2021 வரையிலான தரவுகளின் சராசரியை அடிப்படையில் மகிழ்ச்சிக்கு 0 முதல் 10 வரையில் மதிப்பு வழங்குகிறது. மேலும் மகிழ்ச்சியைப் பற்றிய மக்களின் … Read more

முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு?

இந்திய பங்கு சந்தையானது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த இரு அமர்வுகளில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டியினை அதிகரித்த போதிலும் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தகக்து. பொதுவாக இதுபோன்ற சமயங்களில் அண்டை நாடுகளில் உள்ள பங்கு சந்தைகளில் உள்ள முதலீடுகள் பெரியளவில் வெளியேறலாம். இதனால் பங்கு சந்தையானது மிக மோசமான சரிவினைக் … Read more

“மாணவிகளுக்கு ரூ.1,000 திட்டம் வரவேற்கத்தக்கது தான், ஆனால்..!" – தமிழக பட்ஜெட் குறித்து ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவையில், 2022 – 2023 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்திருந்தார் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இந்த தமிழக பட்ஜெட் குறித்து பல அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸூம் முகநூல் வாயிலாக தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத் தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான … Read more

தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  18/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 38,500 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,51,94,914 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,52,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 127 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,13,521 பேர் குணம் அடைந்து வீடு … Read more

சிலி நாட்டை தாக்கிய ராட்சச மணற்புயல்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி!

வடக்கு சிலியின் முக்கிய நகரங்களில் பயங்கரமான மணற்புயல் தாக்கியதில் 9000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. சவுத் அமெரிக்காவின் சிலி நாட்டில் அட்டகாமா பாலைவனத்திற்கு மிக அருகில் உள்ள டியகோ டி அல்மாக்ரோ என்ற நகரத்தை மிகப்பெரிய ராட்சச மணற்புயல் தாக்கியதில் அந்த நகரம் பெரும் சேதம் அடைந்துள்ளது. இந்த மணற்புயல் புயல் தாக்கியதில் இதுவரை சுமார் 9000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டத்துடன் 75 வீடுகள் வரை பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. … Read more

புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை: கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபைக் கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் முன்னதாகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்து அமர்ந்து இருந்தனர். சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு சட்டசபைக்குள் வந்ததும் சபை தொடங்கியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பட்ஜெட் தாக்கல் செய்யும்படி சபாநாயகர் கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். “பட்டங்கள் ஆள்வதும் … Read more

கோடை காலத்தில் உடல் நலம் பேண பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: கோடை காலத்தில் உடல் நலம் பேண பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இளநீர், நீரா, பதநீர் போன்ற பானங்களை பருகுவதால் உடல் நலத்துக்கும் நல்லது, விவசாயிகளின் வருமானமும் உயரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.