கோடை காலத்தில் உடல் நலம் பேண பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: கோடை காலத்தில் உடல் நலம் பேண பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இளநீர், நீரா, பதநீர் போன்ற பானங்களை பருகுவதால் உடல் நலத்துக்கும் நல்லது, விவசாயிகளின் வருமானமும் உயரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பல்லாரி மாவட்டத்திற்கு ஆந்திரா தண்ணீர்! | Dinamalar

பெங்களூரு-”ஆந்திராவிலிருந்து கர்நாடகாவுடன் இணைக்கப்பட்ட பல்லாரி மாவட்டத்துக்கு, அதன் பங்கு நீரையும் பெறுவது தொடர்பாக அரசு பரிசீலிக்கிறது,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:அமைச்சர் கோவிந்த் கார்ஜோள்: துங்கபத்ரா அணைக்கு, நவிலே அருகில் அணை கட்ட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 14.30 கோடி ரூபாய் வழங்க, 2020 மே 16ல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மூத்த உறுப்பினரான அல்லம் வீரபத்ரப்பா, பெண்ணை ஆண் பார்க்கவில்லை; ஆணை … Read more

பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன?

கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இதற்கிடையில் இடைகால பட்ஜெட்டினை நிதியமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகின்றார். இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கொரோனாவினால் சரிவடைந்த பொருளாதாரமே இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ள நிதியமைச்சர், நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், 4 முக்கிய துறைகளுக்கு இந்த … Read more

23-வது நாளாக தொடரும் உக்ரைன்-ரஷ்யா போர்: இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்…

உக்ரைன் மீதான 23-வது நாள் ரஷ்ய படையெடுப்பில், தலைநகர் கீவில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரை நடந்த நிகழ்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். லிவிவ் விமான ஆலை அழிக்கப்பட்டது: மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ரஷ்யா பல ஏவுகணைகளை செலுத்தியதில் அதற்கு அருகிலுள்ள விமானம் பழுதுபார்க்கும் ஆலை அழிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். லிவிவ் நகரம், போலாந்து எல்லைக்கு அருகில் ஆயிரக்கணக்கான அகதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாகச் செயல்பட்டு வருகிறது. … Read more

தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  18/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 38,500 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,51,94,914 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,52,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 127 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,13,521 பேர் குணம் அடைந்து வீடு … Read more

தமிழகத்தில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 70 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 19 பேருக்கு தொற்று … Read more

ஹிஜாப் அணிய தடை; தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக பாஜக அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, குடியாத்தம், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்தியா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத் தொடர்பை புதுப்பிக்க ஈரான் விருப்பம்| Dinamalar

டில்லி: இந்தியா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத் தொடர்பை புதுப்பிக்க ஈரான் அரசு விரும்புவதாக டில்லியில் உள்ள ஈரான் தூதரகம் தகவல் அளித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் ஈரான் அரசு தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தது.இதனை அடுத்து ஈரானின் அணு ஆயுத சோதனையை எதிர்க்கும் வகையில் டிரம்ப் அமெரிக்காவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தடை செய்து, பல்வேறு தடை … Read more

தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது – ப.சிதம்பரம்

புதுடெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதனால் காங்கிரஸ் தலைமை குறித்து அக்கட்சியினரிடையே அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.  இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதன் பிறகு நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் … Read more