பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் தலாய்லாமா| Dinamalar

தர்மசாலா: திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா, இரண்டாண்டுகளுக்கு பின் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமா, கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். ஹிமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் தங்கியுள்ளார்.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். வயது மூப்பு காரணமாக அவரது உடல் நல நிலை என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று (மார்ச்.18) பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரது … Read more

கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டம் – மாநில கல்வித்துறை மந்திரி தகவல்

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக மாநில கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலமாக பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.  மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை வழங்கும் வகையில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் வைப்பது குறித்து கல்வி நிபுணர்களுடன் … Read more

தொழிற்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன.. மாஸ் காட்டும் தமிழக அரசு!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். குறிப்பாக தொழிற்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சரி தொழிற்துறைக்கு எந்த மாதிரியான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகின? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன? உலக முதலீட்டாளார்களை ஈர்க்க திட்டம் தமிழில் பட்ஜெட்டினை வாசித்த பிடி ஆர் தீடிரென தனது உரையினை ஆங்கிலத்தில் வாசித்தார். … Read more

“ராவணனைப் போன்றோர் கீதையைப் பற்றி பேசுகிறார்கள்!" – குஜராத் அமைச்சரை விமர்சித்த டெல்லி அமைச்சர்

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், மாநில கல்வியமைச்சர் ஜிது வகானி, பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்ப்பது குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “2022/23 கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத்கீதை இருக்கும். பகவத்கீதையின் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பகவத்கீதை 6-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும்” … Read more

பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல்! புடினின் விடுத்த இரண்டு வகை கோரிக்கைகள்..

உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது.   புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பொலிஸார் உட்பட குறைந்தது 19பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   உக்ரைனிய படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாக, ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

நாளை சண்டிகரில் பஞ்சாப் அமைச்சரவை பதவி ஏற்பு

சண்டிகர் நாளை பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்றாகும்.   இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.    ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி  பெற்றுள்ளது.  இதற்கு  முன்பும் இங்கு பாஜக ஆட்சி புரியவில்லை என்பதும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி … Read more

10 ரஷிய தூதர்களை வெளியேற்றுகிறது பல்கேரியா…. 72 மணி நேரம் கெடு

சோபியா: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. தூதர்களையும் வெளியேற்றுகின்றன. இந்நிலையில், பல்கேரியாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகள் 10 பேரை ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரிகளாக பல்கேரிய அரசு அறிவித்துள்ளது. தூதரக அந்தஸ்துடன் ஒத்துப்போகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறிய பல்கேரியா அரசு, அவர்களை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு … Read more

இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிர்வாகமும், சட்டம் ஒழுங்கும் சரியாக இருந்தால் பொருளாதாரம் உயரும் என்பதுதான் உண்மை என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்ந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

ஜேம்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்| Dinamalar

பெங்களூரு-மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று அவரது நடிப்பில் ஜேம்ஸ் படம் ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி வெளியே வந்தனர்.மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகா முழுவதும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீசானது.இதனால் தியேட்டர்கள் அனைத்தும் திருவிழா கோலம் போல காட்சி அளித்தது. படம் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி பார்க்கும் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி, தெற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.   இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய 5 தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக பின்பற்ற வேண்டும். … Read more